தமிழகத்தில் தொடங்கவுள்ள செஸ் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்பதில் ஆர்வமுடன் காத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி
செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் இன்று தொடங்கி வருகிற 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான ஏற்பாட்டை தமிழக அரசு கடந்த 5 மாதங்களாக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் தமிழக அரசு நடத்தியுள்ளது. குறிப்பாக மாணவ, மாணவிகளுக்கு செஸ் போட்டியும் நடத்தியுள்ளது. இந்தநிலையில் இன்று நடைபெறவுள்ள போட்டிக்காக மாமல்லபுரத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நம்ம செஸ், நம்ம சென்னை என்கிற வகையில் விளம்பரம்படுத்தப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள செஸ் தொடர்பான தீம் மியூசிக் ஆல்பமும் வெளியிடப்பட்டுள்ளது. இன்று தொடங்கவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு தமிழக அரசு சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழக அரசின் அழைப்பை ஏற்று பிரதமர் இன்று மலை சென்னை வருகிறார்.
இதுபோல் வேறு எங்கும் பார்த்ததில்லை… செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடுகளை புகழ்ந்து தள்ளிய விஸ்வநாதன் ஆனந்த்!!
சென்னை வரும் மோடி
சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கடலோர காவல்படை தளத்தில் இறங்குகிறார். அங்கிருந்து கார் மூலம் ஜவஹர்லால் நேரு அரங்கத்திற்கு செல்கிறார். அங்கு நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்டு விட்டு கார் மூலம் ராஜ்பவன் செல்கிறார். இரவு சென்னையில் தங்கும் மோடி நாளை காலை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். இந்தநிலையில் ஒலிம்பியாட் செஸ் போட்டி தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இன்று மாலை 6 மணிக்கு தொடங்கவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க ஆவலோடு காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் அதிலும் செஸ் போட்டியோடு தொடர்புடைய தமிழ்நாட்டில் செஸ் போட்டி நடைபெறுவது சிறப்பானது என மோடி தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்