மக்களின் உணவுப் பழக்கவழக்கத்தில் மோடி அரசே தலையிடாதே! – பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம்…

 
Published : Jun 03, 2017, 10:57 AM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
மக்களின் உணவுப் பழக்கவழக்கத்தில் மோடி அரசே தலையிடாதே! – பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம்…

சுருக்கம்

modi government Do not interfere with people food habbits

மாட்டிறைச்சிக்கு விதித்த தடைக்கு எதிர்த்து, “மக்களின் உணவுப் பழக்கவழக்கத்தில் மோடி அரசே தலையிடாதே” என்று முழக்கமிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சமீபத்தில் இறைச்சிக்காக மாடுகளை விற்கக் கூடாது என்று மோடி தடை விதித்தார். இந்த தடை சட்டத்தை நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் மக்களும் கடும் எதிர்த்துள்ளன. மேலும், மோடி அரசைக் கண்டித்து போராட்டங்களும்,  மாட்டுக் கறி திருவிழா நடத்தியும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்ற்னர்.

அந்த வகையில் மத்திய அரக்சை கண்டித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் அரசியல்குழு மாநிலச் செயலாளர் அரசு.வணங்காமுடி தலைமை வகித்தார்.

தொகுதிச் செயலாளர்கள் நகு.செல்வசுந்தரம் (நிரவி – திருபட்டினம்), வீ.தமிழரசி (நெடுங்காடு), ஆ.வல்லவன் (திருநள்ளாறு), க.கலைவாணன் (காரைக்கால் – தெற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இளஞ்சிறுத்தை எழுச்சிப்பாசறை முதன்மைச் செயலாளர் பொதினிவளவன், அரசியல் குழு மாநில துணைச் செயலாளர் பொன்.செந்தமிழ்ச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அ.வின்சென்ட், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் க.தமிழழகன், அரவரசன், பார்வேந்தன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சியினர் மற்றும் ஏராளாமான மக்கள் கலந்து கொண்டு மாட்டுக் கறிக்கு விதித்த தடையை திருமப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மேலும், மக்களின் உணவுப் பழக்கவழக்கத்தில் மோடி அரசே தலையிடாதே என்று முழக்கங்களை எழுப்பி தங்களது உணர்ச்சியை வெளிப்படுத்தினர்.

PREV
click me!

Recommended Stories

மளமளவென பற்றி எரிந்த எல்ஐசி அலுவலகம்! பெண் மேலாளர் பலியானது எப்படி? பரபரப்பு தகவல்
அரசு வேலை வேண்டுமா.! இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!