
காஞ்சிபுரம்
கன மழையால் கம்பர் தெருவில் மழைநீர் தேங்கியதால் திருபெரும்புதூர் பேரூராட்சி எம்எல்ஏ கே.பழனி பார்வையிட்டார். மழைநீரை உடனே அகற்ற வேண்டும் என்று எடுக்குமாறு பேரூராட்சி நிர்வாகத்திற்கு அவர் அறிவுறுத்தினார்.
காஞ்சிபுரம் மாவட்டம், திருபெரும்புதூர் பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், பேரூராட்சிக்குள்பட்ட கோதண்டராமன் நகர், கம்பர் தெருவில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு, குழாய் இணைப்புகள் அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இதனால் கம்பர் தெருவில் பொதுமக்கள் நடந்து செல்லகூட முடியாத நிலை உள்ளது.
இந்தச் சாலையை சீரமைக்க வேண்டும் எனக் கூறி இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், கடந்த புதன்கிழமை ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக கம்பர் தெருவில் மழைநீர் தேங்கியதால் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக காட்சியளித்தது.
இதனையடுத்து, கம்பர் தெருவில் திருபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பழனி நேற்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர், தெருவில் உள்ள மழைநீரை உடனடியாக அகற்றி நடவடிக்கை எடுக்குமாறு திருபெரும்புதூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.