
அதிமுக சார்பில் இளம்பை தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ தலைமையில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.
பெரம்பலூர் மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக் கூட்டம், பெரம்பலூர் மேற்கு வானொலித் திடலில் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் இளம்பை தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் முகில், மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., மருதராஜா எம்.பி., சினிமா நடிகர் வையாபுரி, முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் தலைமை கழக பேச்சாளர்கள் சரஸ்வதி, துகிலி.நல்லுசாமி உள்பட பலர் பேசினார்கள்.
இதேபோல் பெரம்பலூரில் மாவட்ட தி.மு.க. மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் தேரடித் திடலில் நடந்தது.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் முருகேசன் தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட வடக்கு இலக்கிய அணி செயலாளர் ஆடுதுறை உத்திராபதி, தலைமை கழக பேச்சாளர் கோதை மதிவாணன், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் பேசினார்கள்.
இதில் மாநில மருத்துவ அணி பொறுப்பாளர் மருத்துவர் வல்லபன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஓவியர் முகுந்தன், பெரம்பலூர் நகர செயலாளர் முத்துரத்னாபிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.