6 மாத காலத்தில் குளிரூட்டப்பட்ட பயணிகள் காத்திருப்பு அறை, நகரும் படிக்கட்டு அமைக்கப்படும்: செங்கோட்டையன்!

By Rsiva kumar  |  First Published Jan 15, 2023, 4:11 PM IST

கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் குளிரூட்டப்பட்ட பயணிகள் காத்திருப்பு அறையும்  தானியங்கி  நகரும் படிக்கட்டுகளும் 6 மாத காலத்தில் அமைக்கப்படுமென சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 


கோபிசெட்டிபாளையம் அருகே பிரசித்தி பெற்ற பாரியூர் அம்மன் திருக்கோயிலில் நடைபெற்று வரும் தேர்த்திருவிழாவில்  லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த திருவிழாவின் ஒருபகுதியாக பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மலர்பல்லக்கு ஊர்வல  நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் துவங்கியது.

வாகரையில் பொங்கல் விழாவை முன்னிட்டு நடந்த மாரத்தான் போட்டி!

Tap to resize

Latest Videos

கோபி நகர்மன்ற உறுப்பினர் முத்துரமணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்த பின்னர் மலர்பல்லக்கு ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு வாழ்க என்று முழக்கமிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் பொங்கல் கொண்டாட்டம்!

அதனைதொடர்ந்து அங்கிருந்த பொதுமக்களிடம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில் கோபி பேருந்து நிலையத்தில் பயணிகள் வசதிக்காக குளிரூட்டப்பட்ட  காத்திருப்பு அறையும் சாலையை கடப்பதற்கு வசதியாக தானியங்கி நடைமேடையும்  6 மாதத்திற்குள் அமைக்கப்படுமென தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்: தமிழக அரசின் பெரியார், அண்ணா, திருவள்ளுவர் விருதுகள் அறிவிப்பு

click me!