
தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் அலங்கோல ஆட்சியை ,பினாமி ஆட்சியை அகற்ற மக்கள் சபதம் ஏற்க வேண்டுமென திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் 94 வது பிறந்த நாள் விழா காஞ்சிபுரத்தை அடுத்த கரிங்காலில் நடைபெற்றது. இதில் பங்கேற்றப் பேசிய அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக அமைச்சரவையில் உள்ள பெரும்பாலான அமைச்சர்கள் மீது வழக்கு உள்ளது.
இன்னும் சிறிது காலம் இந்த ஆட்சி நீடித்தால் அனைத்து அமைச்சர்கள் மீதும் வழக்கு வரும் சூழல் வந்து விடும் என்றார்.
குட்கா புகாரில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்ன விஜய பாஸ்கர். அது குறித்து தொடர்ந்து ஆதாரங்களுடன் பேசி வரும், தன் மீது வழக்குத் தொடரும் தைரியம் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு உண்டா? என ஸ்டாலினி கேள்வி எழுப்பினார்.
ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள எம்எல்ஏக்களுக்கு பணம் பட்டுவாடா அளிக்கபட்டது என்ற செய்தி பொய்யானது என கூறும் அதிமுக அரசு, அதை வெளியிட்ட தொலைகாட்சிகள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை தயங்குவது ஏன் ? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் 6 ஆறு ஆண்டு அதிமுக ஆட்சியில் எதுவும் நடைபெற வில்லை.. முதலமைச்சராக இருந்த போது ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட போது அவருக்கு சிகிச்சை குறித்து சரியான முறையில் தெரிவிக்கபடவில்லை..அண்ணா எம்ஜிஆர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டபோது தினந்தோறும் பத்திரிக்கையில் செய்தி வெளியிடபட்டது.பொறுப்பு வகித்த ஒபிஸ் குறித்து ஏன் வாய் திறந்தாரா ?
ஜெயலலிதா மறைவு குறித்து அதிகாரபூர்வ செய்தி வரும் முன்பே பதவியேற்றுக் கொண்ட ஓபிஎஸ் பதவி போன பின் நீதி விசாரணை நடத்த வேண்டும் என ஓலமிடுவதாக குற்றம் சாட்டினார்.
நம்பிக்கை வாக்கு எடுப்பில் ஆளுங்கட்சி உறுப்பினர்களே தங்களுக்கு பணம் தரபட்டது தொடர்பாக வெளியான தகவல் குறித்து சட்டமன்றத்தில் போதுமான விளக்கம் அளிக்கபடவில்லை என அவர் குற்றம்சாட்டினார்...
கூவத்தூர் கொண்டாடம், குட்கா விவகாரம் போன்றவை வெளிவர கூடாது என்பதற்காக தான் டிகே ராஜேந்திரனுக்கு பம்பர் பரிசாக டிஜிபி பதவி நீட்டிப்பு செய்யபட்டுள்ளதாக ஸ்டாலின் கூறினார்