கலைஞர் கோட்டம் திறப்பு விழா: திருவாரூர் செல்லும் முதல்வர் ஸ்டாலின்!

By Manikanda Prabu  |  First Published Jun 18, 2023, 10:33 AM IST

கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை திருவாரூர் செல்லவுள்ளார்


தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 100ஆவது பிறந்தநாளை திமுகவினர் நூற்றாண்டு விழாவாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி, திருவாரூர் அடுத்த காட்டூரில் சுமார் 7 ஆயிரம் சதுர அடியில் ரூ.12 கோடி மதிப்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம், திருவாரூர் தேர் போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை.! தேதி குறித்த காவேரி மருத்துவமனை மருத்துவர்கள்.?

Tap to resize

Latest Videos

கலைஞர் கோட்டத்தில் 2 திருமண மண்டபங்கள், அருங்காட்சியகம், முத்துவேலர் நூலகம், கலைஞரின் முழு உருவ சிலை உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருவாரூர் கலைஞர் கோட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வருகிற 20ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. இதனை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் திறந்து வைக்கவுள்ளார். கலைஞர் கோட்டத்தில் உள்ள முத்துவேலர் நூலகத்தை அம்மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைக்கவுள்ளார்.

கலைஞர் கோட்டம் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை திருவாரூர் செல்லவுள்ளார். சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்து சாலை மார்க்கமாக தஞ்சாவூர் வழியாக காரில் திருவாரூர் செல்லவுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு, திருவாரூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திருவாரூர் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவையடுத்து, வைரமுத்து தலைமையில் கவியரங்கமும், சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றமும் நடைபெறவுள்ளது.

click me!