PRIDE OF TAMILNADU என்பதற்கு பதிலாக BRIDE OF TAMILNADU என முதல்வர் ஸ்டாலினை குறிப்பிட்டு திமுகவினர் அச்சடித்துள்ள போஸ்டர் வைரலாகி வருகிறது
திமுகவுக்கும் போஸ்ட்ர்களுக்கும் ஏழாம்பொருத்தமாக உள்ளது. சமீபத்தில் சீனக் கொடி பொறிக்கப்பட்ட ராக்கெட்களுடன் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டது சர்ச்சையாகியது.
இது தொடர்பாக விளக்கம் அளித்த அனிதா ராதாகிருஷ்ணன், சிறு தவறு நடந்து விட்டதாகவும், விளம்பரத்தை டிசைன் செய்தவர் தவறுதலாக அந்த புகைப்படத்தை போட்டு விட்டதாகவும் விளக்கம் அளித்தார். ஆனால், விளம்பரம் வெளியிட்டவர் அதனை சரிபார்த்து ஒப்புதல் கொடுத்த பின்னர் தானே பரிசுரமாகும், அப்படி இருக்கையில் எப்படி அதைக் கூட கவனிக்காமல் விட்டார்களா? என பலரும் கேள்வி எழுப்பினர்.
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கின!
இந்த நிலையில், ஆங்கிலத்தில் தவறாக பொருள்படும் படியான வாசகத்துடன் திமுகவினர் அச்சடித்துள்ள போஸ்டர் வைரலாகி வருகிறது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் கடந்த 1ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அதன் ஒரு பகுதியாக சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி திமுக இளைஞரணி சார்பாக 576 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இது தொடர்பான போஸ்டர்களில் முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தின் பின்னணியில் PRIDE OF TAMILNADU (தமிழகத்தின் பெருமை) என அச்சிடுவதற்கு பதிலாக BRIDE OF TAMILNADU (தமிழகத்தின் மணமகள்) என ஆங்கிலத்தில் தவறாக அச்சிட்டுள்ளனர். இந்த விவகாரம் தற்போது வைரலாகி வருகிறது.