2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள திமுக ஒருங்கிணைப்புக்குழு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

By SG Balan  |  First Published Jul 20, 2024, 9:06 PM IST

2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான திமுக ஒருங்கிணைப்புக் குழுவை அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான திமுக ஒருங்கிணைப்புக் குழுவை அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து அண்ணா அறிவாலயம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கழகப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக்குழு தனது பணிகளை மிகச் சிறப்பாகச் செய்தது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

மேலும், அதே வகையில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு, திமுகவில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள், அமைப்பு ரீதியான சீரமைப்புகளை தலைமைக்குப் பரிந்துரைக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படுகிறது என்று அறிவாலயத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\

அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக செய்தித்தொடர்பாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான திமுகவின் ஒருங்கிணைப்புக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கைது! உடைத்து வீசப்பட்ட செல்போன் பாகங்கள் மீட்பு!

click me!