வேலை நிறுத்தத்தை முறியடிப்போம்… அமைச்சர் விஜய பாஸ்கரின் நெத்தியடி பேச்சு…

 
Published : May 15, 2017, 06:40 AM ISTUpdated : Sep 19, 2018, 03:17 AM IST
வேலை நிறுத்தத்தை முறியடிப்போம்… அமைச்சர் விஜய பாஸ்கரின் நெத்தியடி பேச்சு…

சுருக்கம்

Minister vijaya baskar press meet

பொது மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைத்துப் பேருந்துகளும் இயக்கப்படும் என்றும் இந்த வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக முறியடிப்போம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொழிலாளர் நலனை தொழிற்சங்கத்தினர் முக்கியமாக கருதவில்லை என்றும் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தியே தீர வேண்டும்  என்ற நோக்கத்தோடு மட்டுமே பேச்சுவார்த்தையில் அவர்கள் கலந்து கொண்டனர் என குற்றம்சாட்டினர்.

இந்த ஸ்டிரைக்கை செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்குமாறு கேட்டு கொண்டதோடு மட்டுமல்லாமல்  தொழிலாளர்களுக்காக ரூ.750 கோடியுடன் கூடுதலாக ரூ.500 கோடி வழங்க ஒப்பு கொண்டோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்

அனைத்துப் பிரச்சனைகளுக்கும்  ஒரே நாளி்ல தீர்வு காண முடியுமா என தொழிலாளர்கள் யோசிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

2000 தனியார் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தையில் அரசின் நிலைப்பாட்டை 37 தொழிற்சங்கத்தினர் ஏற்று கொண்டனர். 10 தொழிற்சங்கத்தினர் மட்டுமே அரசை எதிர்க்கின்றன என்று தெரிவித்த அவர். வேலை நிறுத்தம் என்ற ஒரே எண்ணத்தில் தொழிலாளர்களை தொழிற்சங்கங்கள் திசை திருப்பகின்றன என்றும் கூறினார்.

ரயில்வே துறை மூலம் சிறப்பு ரயில்கள் இயக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன… சென்னையில் கூடுதலாக மின்சார ரயில் சேவை வழங்கப்பட்டு வருகின்றன…வழக்கம் போல் அரசு பஸ்கள்  இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது…. ஸ்டிரைக்கை முறியடிக்க தேவையான நடவடிக்கை எடுத்துள்ளோம். ஓய்வு பெற்ற ஊழியர்களை கொண்டு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார். 

 

 

PREV
click me!

Recommended Stories

காரை முற்றுகையிட்ட அஜிதா... நிற்காமல் சென்ற விஜய் - பனையூர் தவெக அலுவலகத்தில் பரபரப்பு
அமர்பிரசாத்துடன் ஆந்திரா பக்கம் கரை ஒதுங்கிய அண்ணாமலை..! அதிமுக பேச்சு வார்த்தையில் கழட்டிவிட்ட பாஜக..!