
புதுக்கோட்டை தென்னலூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான, கொம்பன் காளை வாடிவாசல் கட்டையில் மோதி உயிரிழந்தது.
எந்த ஒரு ஜல்லிகட்டிலும் யார் பிடியிலும் சிக்காத கட்டுக்கடங்காத தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் என்ற காளை களத்தில் வீர மரணம் அடைந்ததால் அப்பகுதியே சோகமாக மாறியது.
புதுக்கோட்டை மாவட்டம் திருநல்லூர் என்ற தென்னலூரில் நடந்த ஜல்லிகட்டில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் என்ற காளை வாடி வாசலை விட்டு வெளியே வரும் போது சுவற்றில் மோதி களத்திலேயே வீரமரணம் அடைந்தது. பின்னர் அந்த காளையை டாடா ஏசில் கொண்டு சென்றனர். பின்னர் அந்த வீர மரணம் அடைந்த கொம்பன் காளையை இலுப்பூரில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் தோட்டத்தில் அமைச்சர் குடும்பத்தினர் மற்றும் ஊர் பொது மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி இறுதி சடங்கு செய்தனர்.
மேலும்,சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கருக்கு சொந்தமான இந்த காளை இறந்ததால், இந்த தகவல் மேலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.