பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ப்டுள்ளார்.
செந்தில் பலாஜிக்கு உடல்நிலை பாதிப்பு
அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்தததாக வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பிறகு கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்ததது. அப்போது அவருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இருதய பகுதியில் அடைப்பு இருப்பதாக மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்ததையடுத்து தனியார் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் இருந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் 100 நாட்களுக்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அதிகாலை செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது மருத்துவமனை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக செந்தில் பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அமைச்சர் செந்தில் பாலாஜியிட் உடல்நிலை தொடர்பாக மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் ஐடி சோதனை.. ரூ.2.50 கோடி பறிமுதல்..