தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னை இருக்குமா ? அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன அதிர்ச்சி தகவல் !

Published : Jun 12, 2022, 02:19 PM IST
தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னை இருக்குமா ? அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன அதிர்ச்சி தகவல் !

சுருக்கம்

TNEB : வேறு எந்த மாநிலங்களும் குறைந்த விலையில் நிலக்கரியை இறக்குமதி செய்ததாக செய்திகள் வெளிவந்ததாக எனக்கு தெரியவில்லை.தமிழகத்தில் மின்தேவை அதிகரித்துள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி

இன்று வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஆய்வு செய்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி. பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘தனியார் கொள்முதல் இல்லாமல் சொந்தமாக 6,220 மெகாவாட் மின் உற்பத்தியை அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவு செய்வதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.நிலக்கரி கையிருப்பு ஆறரை நாட்களுக்கு உள்ளது.

எனினும்,137 டாலருக்கு 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி இறக்குமதி என்பது நிலக்கரி தட்டுப்பாட்டுக்கு முன்னதாகவே மாண்புமிகு முதல்வர் அவர்கள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக வாரியத்தின் மூலமாக இறக்குமதி செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டு அவை இரு நிறுவனங்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டு தமிழகத்திற்கு நிலக்கரி வந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் மின்வெட்டு

ஆனால்,வேறு எந்த மாநிலங்களும் குறைந்த விலையில் நிலக்கரியை இறக்குமதி செய்ததாக செய்திகள் வெளிவந்ததாக எனக்கு தெரியவில்லை.தமிழகத்தில் மின்தேவை அதிகரித்துள்ளது.எனினும் இனி வரும் காலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லாத அளவிற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

இதையும் படிங்க : Sonu Sood : நான்கு கை, நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை.. நடிகர் சோனு சூட் செய்த நெகிழ்ச்சி செயல்.!

இதையும் படிங்க : சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்.. இந்து சமய அறநிலையத்துறை எடுத்த அதிரடி முடிவு ! பிரச்னை ஓயுமா ?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தேர்தல் நேரத்தில் மடிக்கணினி..? முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய நயினார்..!
பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை..! ONGC சொத்துகள் சேதம்.. விவசாய சங்க தலைவருக்கு நீதிமன்றம் அதிரடி