”மரக்கன்றுகளை வளர்த்தால் தங்க நாணயம் பரிசு !” அமைச்சர் சேகர் பாபு வெளியிட்ட மாஸ் தகவல்

Published : Jun 12, 2022, 02:40 PM ISTUpdated : Jun 12, 2022, 02:42 PM IST
”மரக்கன்றுகளை வளர்த்தால் தங்க நாணயம் பரிசு !” அமைச்சர் சேகர் பாபு வெளியிட்ட மாஸ் தகவல்

சுருக்கம்

DMK :கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு முறையாக பராமரித்து வருபவர்களுக்கு அடுத்த ஆண்டு கலைஞர் பிறந்த நாளில் தங்க நாணயம் வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். 

முதல்வர் ஸ்டாலின்

முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான மறைந்த மு.க கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதியன்று அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று சட்டசபையில் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணாநகரில் மாவட்ட கிழக்கு மாவட்ட சுற்றுச் சூழல் அணி சார்பில் 9999 மரக்கன்றுகள் நடும் நிகழ்வை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து,கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு முறையாக பராமரித்து வருபவர்களுக்கு அடுத்த ஆண்டு கலைஞர் பிறந்த நாளில் தங்க நாணயம் வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் பேசும்போது, இந்த மாஸ் அறிவிப்பை வெளியிட்டார்.

தங்க நாணயம் பரிசு

அதன்படி, ‘தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் பணிக்கு முதல்வர் முக்கியத்துவம் அளித்து வருகிறார்.இதனால்,கலைஞர் பிறந்த நாளில் மரக்கன்றுகளை நட்டு,அதனை நன்றாக பரமாரித்து வருபவர்களுக்கு குழுவை வைத்து தேர்வு செய்து அடுத்த ஆண்டு இதே நாளில் பரிசு வழங்கப்படும்.மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு இவை வழங்கப்படும்’ என்று கூறினார். இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : Sonu Sood : நான்கு கை, நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை.. நடிகர் சோனு சூட் செய்த நெகிழ்ச்சி செயல்.!

இதையும் படிங்க : சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்.. இந்து சமய அறநிலையத்துறை எடுத்த அதிரடி முடிவு ! பிரச்னை ஓயுமா ?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
கலைஞருக்கு பாரத ரத்னா விருது வேண்டும்.. மக்களவையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை