இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் கொட்ட போகிறது.. வானிலை அப்டேட்

Published : Jun 12, 2022, 02:21 PM IST
இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் கொட்ட போகிறது.. வானிலை அப்டேட்

சுருக்கம்

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும்‌ வெப்பச்சலனம்‌ காரணமாக,

12.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌ கூடும்‌. தருமபுரி, சேலம்‌, நாமக்கல்‌, பெரம்பலூர்‌, கள்ளக்குறிச்சி,
திருவண்ணாமலை, திருப்பத்தூர்‌, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, திண்டுக்கல்‌ மற்றும்‌ தேனி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

13.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

14.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

15.06.2022, 16.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌ கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

12.06.2022, 13.06.2022: இலட்சத்‌தீவு பகுதி, தென் கிழக்கு அரபிக்கடல்‌, கேரளா கடலோரப்பகுஇகள்‌ மற்றும்‌ வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலோரப் பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுஇகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னை இருக்குமா ? அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன அதிர்ச்சி தகவல் !
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Temple Mystery : சாமிக்கு செருப்பைக் காணிக்கையாகப் படைக்கும் பக்தர்கள்! செருப்புகளை அணிந்து இரவில் நடமாடும் தெய்வம்!
Chennai Special Buses : சென்னையில் 5 இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள்! எந்த ஊருக்கு எங்கிருந்து பஸ்? முழு விவரம்!