கொரோனா காலத்தில் எங்க தலைவரு அப்படி! அவர பத்தி பேசுறதுக்கு அருகதை இல்லை! இபிஎஸ்-ஐ விளாசும் சேகர்பாபு!

Published : Oct 23, 2025, 02:49 PM IST
sekar babu

சுருக்கம்

சந்தையை மேம்படுத்தும் நோக்கில் 40 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்ட 4 மழைநீர் வடிகால் பணிகளில் 70% முடிவடைந்துள்ளதாகவும், டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் முழுமையாக நிறைவடையும் எனவும் அவர் தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர்: கோயம்பேடு வணிக வளாகத்துக்கு தினம் தோறும் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வருகின்றனர். பொங்கல் உள்ளிட்ட அனைத்து பண்டிகை காலங்களில் இதன் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்கிறது. எனவே இங்கு மழைநீர் தேங்காமல் இருக்க சாலை மேம்படுத்துதல், சந்தையை மேம்படுத்தும் நோக்கில் 40 கோடி ரூபாய் செலவில் 4 மழைநீர் வடிகால் பணிகள் தொடங்கப்பட்டது. இதில் 70% பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த பணிகள் முடிந்த பின் தண்ணீர் தேங்கும் பிரச்சினை இருக்காது.

தற்போது மழை நின்ற பின் விரைவாக டிசம்பர் மாதத்திற்கு முன் மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் கோயம்பேடு மார்க்கெட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முடிவடையும். சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் மாநகராட்சி சார்பில் உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடும்போது எல்லாம் சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பொருந்தையை அதிகாரிகள் அழைப்பது இல்லை என்று அவர் கடிந்து கொண்ட சம்பவம் குறித்தான கேள்விக்கு நிறைய வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டுள்ளோம். மக்களை மழை வெள்ளத்தில் இருந்து காக்க ஓடி கொண்டுள்ளோம் சிறிய சிறிய சம்பவங்கள் பேசி தீர்க்கப்படும்.

ஆளும் கட்சியாக இருந்த நேரத்தில் என்ன சுழன்றார் என மக்கள் பார்த்தார்கள். கால் கூட தரையில் படாமல் அவர் பணி செய்தார். கொரோனா காலத்தில் உயிருக்கு பயந்து அனைவரும் வீட்டில் பூட்டி கொண்டிருந்த நேரத்தில், களத்தில் இருந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வெள்ள நிவாரண பணிகள் குறித்து பேசுவதற்கு இபிஎஸ்க்கு எந்த அருகதையும் இல்லை எனத் தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஒரே போன்கால்..! தேனி பேருந்து நிலையத்தில் குவிந்த போலீஸ்! கையும் களவுமாக சிக்கிய பிரசாத்! நடந்தது என்ன?
எழும்பூர் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது.! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே!