அமைதியான திருப்பரங்குன்றம்; சீரான டாஸ்மாக் விற்பனை: அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி

அமைதியான திருப்பரங்குன்றம்; சீரான டாஸ்மாக் விற்பனை: அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி

Published : Jun 06, 2026, 09:03 PM IST

மதுரை மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்டு, தற்போது மூடப்பட்டுள்ள கல் குவாரிகளை தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மதுரையில் குவாரிகள் மூலம் இயற்கை வளங்களை கொள்ளையடித்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என எச்சரித்த அவர், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். இவற்றுடன், மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனையைச் சீராக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர், "அங்கு மக்கள் அமைதியையே விரும்புகிறார்கள்; எனவே, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடைமுறை கடைபிடிக்கப்பட்டதோ, அதே நடைமுறைதான் தொடரும்" என்றார். திருப்பரங்குன்றம் எப்போதும் போல அமைதியாக நிலவ வேண்டும் என்பதே தவெக அரசின் உறுதியான நிலைப்பாடு என்று குறிப்பிட்ட அவர், முதல்வர் செய்தியாளர்களைச் சந்தித்துதான் அரசு நடத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என்றும் பாணியில் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.

04:16DMK-ADMK-BJP : திமுக-அதிமுக-பாஜக கூட்டணி அமையப்போவதைச் சொல்லும் 5 முக்கிய அரசியல் அறிகுறிகள்!
04:32தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து கார்த்தி சிதம்பரம் பேச்சு: மதுரையில் பத்திரிகையாளர் சந்திப்பு!
04:04தூத்துக்குடி : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தீவிரமாக நடைபெறும் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள்!
05:20எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கான அடிப்படை வசதிகள்! காங்கிரஸ் MP ஜோதிமணி ஓபன் டாக்!
08:12காவிரி மற்றும் மேகதாது விவகாரம்: திருச்சியில் ஆர்.காமராஜ் தலைமையில் அதிமுக போராட்டம்!
04:37தலைவர் விஜய் கூறிய அறிவுரை! X தள பதிவுகள் குறித்து லயோலா மணி ஓபன் டாக்!
09:28தமிழக வெற்றி கழகம் முற்றிலும் ஏழைகளுக்கான கட்சி ..! தொழிலாளர் சங்க மாநாட்டில் அமைச்சர் என். ஆனந்த்
09:52“Comeback கொடுப்பதில் நாம் Specialist” – திமுக செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் அதிரடி உரை!
02:21சட்டப்பேரவையில் நீக்கப்பட்ட நிகழ்வுகளை 'ரீல்ஸ்' ஆக வெளியிட்டால் நடவடிக்கை! பேரவைத் தலைவர் எச்சரிக்கை
03:35திமுக செயற்குழு கூட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடக்கம்!