நீங்க இப்படி பேசுவீங்கன்னு எதிர்பார்க்கல! பாஜக தலைவரானதும் சாதி மதவெறி வந்துடுச்சு போல! அமைச்சர் மனோ தங்கராஜ்!

Published : May 18, 2025, 11:03 AM IST
mano thangaraj

சுருக்கம்

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தேசப்பற்று இல்லாதவர்கள் பாகிஸ்தான் செல்லுங்கள் எனக் கூறினார். 

தேசப்பற்று இல்லாதவர்கள் பாகிஸ்தான் செல்லுங்கள்

ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையிலும் பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து மரியாதை செலுத்தும் விதமாக திருப்பூரில் பாஜக சார்பில் கொடி பேரணி நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ட்விட்டரில் பாகிஸ்தான் ஆதரவு கருத்து தெரிவிப்போர் தமிழர் என சொல்ல அருகதை அற்றவர்கள். தேசப்பற்று இல்லாதவர்கள் பாகிஸ்தான் செல்லுங்கள். காங்கிரஸ் முதல்வர் கூட பாகிஸ்தானை எதிர்க்கிறார். நம் முதல்வர் எதையும் கூறவில்லை என கூறியிருந்தார். இந்நிலையில் பாஜக தலைவர் ஆனதும் சாதி வெறியும், மத வெறியும் அவருள் குடிபெயர்ந்துள்ளது என அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார்.

அமைச்சர் மனோ தங்கராஜ்

இதுதொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: நயினார் நாகேந்திரன் இப்படி பேசுவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். பாஜக தலைவர் ஆனதும் சாதி வெறியும், மத வெறியும் அவருள் குடிபெயர்ந்துள்ளது. இதனால் வெளிப்படையாகவே தொடர்ந்து வெறுப்பரசியல் பேசி வருகிறார். இதனால் அவருக்கான அடையாளத்தை நயினார் இழந்து விட்டார்.

வாரிசுகள் தேசப்பற்று குறித்து வாய் திறக்கலாமா?

1500 ஆண்டுகள் இந்திய மண்ணை ஆக்கிரமித்திருந்த மனுஸ்மிருதியும், பாஜகவின் மூதாதையர்களான இந்து மகாசபா, ஆர்.எஸ்.எஸ். போன்ற மதவெறி அமைப்புகளின் இந்து ராஷ்ட்ரா முழக்கமும் தான் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குக் காரணம். பிரிட்டிஷாரிடம் ஓய்வூதியம் வாங்கிக் கொண்டு தங்கள் வயிற்று பிழைப்பை ஆற்றியவர்களின் வாரிசுகள், நாட்டுப்பற்று குறித்து பேசுவது, "சாத்தான் வேதம் ஓதும்" கதை. தேசப்பிதாவை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகளின் வாரிசுகள் தேசப்பற்று குறித்து வாய் திறக்கலாமா?

ஒட்டுமொத்த இந்தியர்கள் வேதனை

சுமார் 1500 ஆண்டுகள் இந்தியாவின் 80 சதவீதம் மக்களை மாடுகளாகக் கூட மதிக்காமல் மனுஸ்மிருதி என்னும் கொடிய நச்சுப்பாம்பை உலாவவிட்டு, பாமர மக்களின் இரத்ததை உறிஞ்சி உல்லாச வாழ்க்கை வாழ்ந்த கோழைகளின் வழியை பின்பற்றுபவர்களுக்கு திடீர் மக்கள் பற்றும், நாட்டுப் பற்றும் வருவது - Patriotism is the last refuge for a Scoundrel என்பதை தெளிவுபடுத்துகிறது. பிரிட்டிஷாரின் கால்பாதம் தொட்டு தவழ்ந்து மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து சிறையில் இருந்து வெளிவந்த தங்களின் கொள்கை மூதாதையர்கள் வழியில் வந்தவர்கள், இப்போது அமெரிக்க அதிபரின் அடிவருடிகளாக மாறி, நாட்டின் இறையாண்மையை கேலிக்கூத்தாக்கி உள்ளது, ஒட்டுமொத்த இந்தியர்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது எனதெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகத்தில் 24 ரயில்களின் எண்கள் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணிக்கோங்க! முக்கிய அறிவிப்பு!
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!