அரசு, தனியார் மருந்தகங்களில் காலாவதி மருந்துகள்..! பறக்கும் படை அமைப்பு- ம.சுப்பிரமணியன் அதிரடி

By Ajmal Khan  |  First Published Nov 11, 2022, 2:30 PM IST

அரசு மற்றும் தனியார் மருந்தகங்களில் காலாவதி மருந்துகள் விற்பனை செய்வதை தடுக்க மாவட்டம் தோறும் பறக்கும் படை அமைக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 


எலிக்காய்ச்சலுக்கு பரிசோதனை மையம்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை இயக்குனரகத்தில் எலிக்காய்ச்சலை கண்டறியக்கூடிய லெப்டோ ஸ்பைரோஸிஸ் ஆய்வகத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,  டி.எம்.எஸ்.வளாகத்தில் லெப்டோ ஸ்பைரோஸிஸ் ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 10 இடங்களில் இந்த ஆய்வகம்  உள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக லெப்டோ ஸ்பைரோஸிஸ் ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை எலி காய்ச்சலை கண்டறிய எலிசா என்ற பரிசோதனை உதவியது. இனி எலி காய்ச்சல் நோய் குறித்து கண்டறிய லெப்டோ ஸ்பைரோஸிஸ்  ஆய்வகம் உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை நிறுத்தி வைப்பு..! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

வீராங்கனைக்கு கால் அகற்றம்

எலி காய்ச்சல் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்,  சிறுநீரகம் , நுரையீரல் உள்ளிடவற்றை பாதிக்கும் எனகூறியவர்,  இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சம் பேரில் 10 பேர் எலி காய்ச்சல் பாதிக்கப்படுகின்றனர். மழைக்காலத்தில் வெறும் காலில் காலணி இல்லாமல் நடந்தால் எலி காய்ச்சல் பாதிப்பு வருகிறது என கூறினார். எலிக்காய்ச்சலுக்கு அறிகுறியாக சிறிய அளவிலான காய்ச்சல், கண் எரிச்சல்,கண் சிவத்தல் போன்றவை இருக்கும் என கூறினார்.  சென்னையில் கால்பந்து விளையாட்டு வீராங்கனை கால் அகற்றம் குறித்தான கேள்விக்கு முறையான சிகிச்சை அளித்தோம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. கவன குறைவால் தவறு நடந்திருந்தால் விசாரணை பின்  நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்தார். 

3 தினங்களுக்கு மழை தொடரும்..! சென்னை, டெல்டா மாவட்டங்களில் மிக கன மழை - வானிலை மையம் எச்சரிக்கை

காலாவதியான மருந்து-எச்சரிக்கை

மருந்தகங்களில் காலாவதியான மருந்து கையிருப்பு வைந்திருந்தால் அது குற்றமாகும். காலாவதியான மருந்துகள் வைத்திருப்பது குறித்து அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்தார். தமிழகத்தில் உள்ள அரசு மருந்தகங்கள் மற்றும் தனியார் மருந்தகங்களில் காலாவதியான மருந்துகள் விற்பனை செய்வதை தடுக்க தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி காலாவதியான மருந்துகள் விற்பனை செய்வதை தடுக்க மாவட்டம் தோறும் பறக்கும்படை அமைக்கப்படும் எனத் தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த திமுக..! நிராகரித்த அதிமுக..

click me!