தமிழகத்தில் அனுமதியில்லாமல் செயல்படும் ஆய்வகங்களுக்கு சீல்..! அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

By Ajmal Khan  |  First Published Jul 11, 2023, 1:11 PM IST

தமிழ்நாட்டில் முறையான அனுமதியில்லாத கருக்கலைப்பு ஆய்வகங்களுக்கு சீல் வைக்கப்படுவதாகவும் இதன் மூலம் சட்டவிரோத கருக்கலைப்பு குறைந்துள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


பேருந்துகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்

உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு ஓமந்தூரார் அரசு  பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அமைச்சர் மா.சுப்பிமணியன் தலைமையில் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையிலிருந்து பேரணி நடைபெற்றது. இதில்  500 செவிலிய மாணவர்கள்,  மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தி சென்றனர். இதைத் தொடர்ந்து அரசு பேருந்துகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வும் அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.  இதை தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  உலக மக்கள் தொகை தினமாக இன்று  மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

இந்திய மக்கள்தொகை 142 கோடி

ஏறத்தாழ 4000 பேருந்துகளில்  விழிப்புணர்வு வாசகங்கள் பேருந்துகளில் ஒட்டப்பட்டுள்ளதாகவும்,  41% பெண்கள் மட்டுமே பேருந்துகளை பயன்படுத்திய நிலையில் மகளிர் இலவச பயணம் அறிவிக்கப்பட்ட பின்னர் 60% பெண்கள் பயணிக்கின்றனர் இதனால் தான் மகளிர் அதிகம் பயணிக்கும் பேருந்துகளில் விழிப்புணர்வு வாசகங்களை ஒட்டியுள்ளோம் என்றார்.இந்திய மக்கள்தொகை 142 கோடியாகவும் விரைவில் சீனாவை கடந்து இந்தியா மக்கள் தொகையில் முதலிடம் என்ற சூழலில் செல்கிறது. மக்கள் தொகை அதிகரிப்பதால் மக்களின் வாழ்விடம் பாதிக்கப்படும் உருவாகும் என தெரிவித்தார். 

அனுமதியில்லாத ஆய்வகங்களுக்கு சீல்

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன்,  கருகலைப்பு தொடர்பான ஆய்வகங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.சட்ட விரோத கருக்கலைப்பு, பிறக்கவிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா  என்ற பாலினம் குறித்து தெரிவிக்கக்கூடாது என்பது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் ஆய்வகங்களில் வைக்கப்பட்டுள்ளது. முறையான அனுமதியில்லாத ஆய்வகங்களுக்கு சீல் வைக்கப்படுவதாகவும், இதன் மூலம் சட்டவிரோத கருக்கலைப்பு உள்ளிட்டவை குறைந்துள்ளது என மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்கிய ஊழியர்; முறையிட்ட குடிமகனை கும்மி எடுத்த காவல் அதிகாரி

click me!