கணக்கில் நான் எடுத்த மார்க் 29 மட்டுமே! அமைச்சர் ஜெயக்குமார் ஜாலி பேச்சு!

 
Published : Jul 09, 2018, 10:21 AM ISTUpdated : Sep 19, 2018, 02:40 AM IST
கணக்கில் நான் எடுத்த மார்க் 29 மட்டுமே! அமைச்சர் ஜெயக்குமார் ஜாலி பேச்சு!

சுருக்கம்

Minister Jayakumar maths Only 29 Mark

பள்ளியில் படித்த போது தான் கணக்கில் வெறும் 29 மார்க் மட்டுமே எடுத்ததாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் தேசிய அளவிலான அபாகஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அபாகஸ் போட்டியில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேலும் அபாகஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் அவர் பரிசு கொடுத்து பாராட்டினார்.பின்னர் நிகழ்ச்சியல் பேசிய ஜெயக்குமார், அபாகஸ் என்பது யோகாவை விட சிறப்பான ஒன்று என்று கூறினார். யோகா மூலம் உடலையும் மனதையும் வலிப்படுத்த முடியும், ஆனால் அபாகஸ் மூலமாக மூளையின் செயல் திறனை அதிகரிக்க முடியும் என்று ஜெயக்குமார் தெரிவித்தார். அபாகஸ் என்பது வெறும் கணிதம் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர், ஆனால் அபாகஸ்சில் சிறப்பாக விளங்கும் மாணவ, மாணவிகள் படிப்பில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள்.

நான் இப்படி கூறுவதால் படிப்பில் கெட்டிக்காரர்களாக இருப்பது முக்கியம என்று யாரும் கருதிவிட வேண்டாம். படிப்பு என்பது முக்கியம் தான். ஆனால் உலக அறிவு அதைவிட முக்கியம். என்னை எடுத்துக் கொள்ளுங்கள் நான் பள்ளியில் படித்த போது கணக்கில் எடுத்த மதிப்பெண்கள் வெறும் 29 தான். ஆனால் தற்போது அபாகஸ் தொடர்புடைய ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளேன் என்று ஜெயக்குமார் கூறியதும், அரங்கில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். உடனே ஜெயக்குமாரும் சிரித்துக் கொண்டே, நான் பெற்ற மதிப்பெண்களை வெளிப்படையாக கூறியது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், மதிப்பெண் மட்டுமே வாழ்வை தீர்மானித்துவிடும் என்று யாரும் கருதிவிடக்கூடாது என்பதற்காகவும் தான் என்று ஜெயக்குமார் பேசி முடித்தார். 

PREV
click me!

Recommended Stories

41 பேரை கொன்று குவித்த நடிகர் விஜய் பின்னால் செல்வது ஏன்..? கிறிஸ்தவ மத முதல்வர் காட்வின் எதிர்ப்பு.. தவெக அதிர்ச்சி..!
எச்சில் கறியை உண்ட சிவபெருமான் இந்து இல்லையா..? எம்.பி., சு.வெங்கடேசன் சர்ச்சை பேச்சு..!