பெண் குட்டி யானை மர்மமான முறையில் இறப்பு; கொடைக்கானல் காட்டுப் பகுதியில் பரபரப்பு...

 
Published : Jul 09, 2018, 10:11 AM ISTUpdated : Sep 19, 2018, 02:40 AM IST
பெண் குட்டி யானை மர்மமான முறையில் இறப்பு; கொடைக்கானல் காட்டுப் பகுதியில் பரபரப்பு...

சுருக்கம்

girl baby elephant mysterious death In Kodaikanal forest

திண்டுக்கல்

கொடைக்கானல் காட்டுப் பகுதியில் பெண் குட்டி யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. 

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ளது புலியூர் ஒத்தமர செட் வனப் பகுதி. இந்த வனப் பகுதியில் யானை ஒன்று இறந்து கிடக்கிறது என்று அதனைப் பார்த்த பொதுமக்கள், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். 

அந்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி, கால்நடை மருத்துவர் அக்கிம் உள்பட 25-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் இறந்து கிடந்த யானையை பார்வையினட்டனர்.

அப்போது, இறந்தது ஐந்து வயதுடைய பெண் குட்டி யானை என்றும் இந்த யானை இறந்து சுமார் 10 நாள்கள் இருக்கும் என்றும் கண்டறிந்தனர்.

மேலும், இந்த குட்டி யானை நோயுற்று இறந்ததா? யாராவது கொன்றுவிட்டனரா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.  அதைத் தொடர்ந்து, மருத்துவர் அக்கிம் அந்த குட்டி யானைக்கு உடற்கூராய்வு நடத்தினார். 

பரிசோதனை எல்லாம் முடிந்தபின்பு அந்த குட்டி யானையை அப்பகுதியிலேயே பொதுமக்கள் உதவியோடு வனத்துறையினர் புதைத்தனர்.

காட்டுப்பகுதியில் பெண் குட்டி யானை மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவத்தால் அந்தப்  பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


 

PREV
click me!

Recommended Stories

ரங் கட்டப்பட்ட ஓடி ஓடி வேலை செய்த அஜிதா அஃனஸ்..! தவெகவில் தடுத்து நிறுத்தப்பட்ட பெண் நிர்வாகி
இளைஞர்களின் வாக்கை பறிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட திமுக.. எங் லுக்கில் மாஸ் காட்டும் ஸ்டாலின் #VibeWithMKS