குடும்ப அட்டைதாரர்களுக்கு சூப்பர் நியூஸ்.! இனி ரேசன் கடைகளில் பாக்கெட் அரிசி.. தமிழக அரசு அறிவிப்பு !

Published : Apr 08, 2022, 04:45 PM IST
குடும்ப அட்டைதாரர்களுக்கு சூப்பர் நியூஸ்.! இனி ரேசன் கடைகளில் பாக்கெட் அரிசி.. தமிழக அரசு அறிவிப்பு !

சுருக்கம்

பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள் வழங்கப்படும், பாக்கெட்டில் அரிசி வழங்கப்படும் என்று  அமைச்சர் சக்கரபாணி உணவுத்துறை மானியக் கோரிக்கை தொடர்பான விவாதத்தின் போது அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைப்பெறுகிறது. அப்போது பேசிய அமைச்சர் சக்கரபாணி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில்,  கூட்டுறவு வங்கிகளில் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை ரூ.12 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும் என தெரிவித்தார்.

பொதுவிநியோக திட்டத்தின் கீழ் கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள் வழங்கப்படும். கூட்டுறவு துறைக்கான ஒருங்கிணைந்த பயிற்சி கொள்கை உருவாக்கப்படும். நியாயவிலை கடைகளில் பாக்கெட் மூலம் அரசு வழங்கப்படும். 

புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகள் இருப்பிடத்திற்கே அஞ்சல் மூலம் அனுப்பப்படும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார். மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறந்த நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களை தேர்வு செய்து பரிசு வழங்கப்படும்' என்று அறிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிமுக நகர இளைஞரணி இணைச் செயலாளரை தட்டித்தூக்கிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி காரணம்!
மது-வால் லட்சக்கணக்கான பெண்கள் கண்ணீர் விட்டு கதறுறாங்க.. மகளிர் முன்னேறிவிட்டதாக ஸ்டாலின் கூறுவது வெட்கக்கேடு!