டிடிவி. தினகரன், நடிகர் செந்தில் மீதான அவதூறு வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி..!

Published : Apr 08, 2022, 03:39 PM IST
 டிடிவி. தினகரன், நடிகர் செந்தில் மீதான அவதூறு வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி..!

சுருக்கம்

கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை அடையாறில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் இல்லத்திற்கு முன்பாக நடிகர் செந்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், திருச்சி தொகுதியின் எம்.பி குமார் குறித்து ஒருமையில் அவதூறாக பேசியதாக திருச்சி மத்திய குற்றப்பிரிவில் குமார் புகார் அளித்தார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன், நடிகர் செந்தில் மீதான அவதூறு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி ரத்து செய்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை அடையாறில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் இல்லத்திற்கு முன்பாக நடிகர் செந்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், திருச்சி தொகுதியின் எம்.பி குமார் குறித்து ஒருமையில் அவதூறாக பேசியதாக திருச்சி மத்திய குற்றப்பிரிவில் குமார் புகார் அளித்தார்.

அவதூறு வழக்கு

அதில் டிடிவி. தினகரனின் தூண்டுதலின் பேரில் தான் நடிகர் செந்தில் தன்னை பற்றி அவதூறாக பேசியதால்  தினகரன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கோரியிருந்தார். இதனையடுத்து  டிடிவி. தினகரன் மற்றும் நடிகர் செந்தில் மீது திருச்சி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த  வழக்கை ரத்து செய்யக் கோரி டிடிவி. தினகரன் மற்றும் செந்தில் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு ரத்து

இந்த மனு  நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, டிடிவி தினகரன் மற்றும் நடிகர் செந்தில்  மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போதையில் தாறுமாறாக ஓடிய கார்! விரட்டி சென்ற காவலர் உயிரி*ழப்பு! இளைஞரை HIT and RUN பிரிவில் தூக்கிய போலீஸ்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!