ஸ்கூலை திறப்போமா..? இல்லையா..? கட் அண்ட் ரைட்டாக சொன்ன அன்பில் மகேஷ்

By manimegalai aFirst Published Sep 23, 2021, 7:07 PM IST
Highlights

1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பதா, வேண்டாமா என்று முடிவு செய்யவில்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறி உள்ளார்.

சென்னை:  1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பதா, வேண்டாமா என்று முடிவு செய்யவில்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறி உள்ளார்.

கொரோனா என்னும் பெருந்தொற்று இப்படி ஒரு உலுக்கு உலுக்கும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். உலக நாடுகளில் இன்னமும் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் பதிவாகி வருகிறது. அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன. இருப்பினும் முன்பை போல பெரிய பாதிப்புகள் இல்லாததால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன… பள்ளிகளும் திறக்கப்பட்டன. குறிப்பாக 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனாலும் மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே கொரோனா தொற்றுகள் இருந்து வருகிறது. நிலைமை இப்படி இருக்க…. அக்டோபர் மாதத்தில் 1ம் வகுப்பு முதுல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி பெரும் குழப்பத்தை விளைவித்தன. பள்ளிகள் திறக்கலாமா, வேண்டாமா என்பது குறித்த அறிக்கையை முதல்வரிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் சமர்ப்பித்தது.

இந் நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிகளை திறக்க சொல்லி தனியார் பள்ளி நிர்வாகங்கள் கேட்டு வருகின்றன.

ஆனால் பெற்றோர்களிடையே கொரோனா அச்சம் நிலவி வருகிறது. எனவே, இது குறித்து இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. கொரோனா நிலைமையை வைத்து அனைத்தும் இறுதி செய்யப்படும் என்று கூறினார்.

click me!