தமிழ்நாட்டில் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பு... அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!!

By Kalai Selvi  |  First Published May 22, 2023, 3:41 PM IST

கோடை விடுமுறைக்கு பின்னர் தமிழ்நாட்டில், ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள்  திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
 


தமிழ்நாட்டில் இந்த ஆண்டுக்கான கல்வி வகுப்புகள் முடிவடைந்தது. இதனால் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஏற்கனவே 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. மேலும், ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களும் இப்போது கோடை விடுமுறையில் உள்ளனர்.

பொதுவாக கோடை விடுமுறை முடிந்த பின்னர் பள்ளிகள் ஜூன் 1ஆம் தேதி திறக்கப்படும். அதுபோல தான் இந்த ஆண்டும் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்தது. ஆனால், தற்போது தமிழ்நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படும் தேதியில் மாற்றப்படும் ஏற்படும் என்று தகவல் பரவியது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: திராட்சையின் ஆரோக்கிய நன்மைகள்...!!

அந்த வகையில் தற்போது, 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 1ஆம் தேதியும், 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 5ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  தெரிவித்துள்ளார்.

click me!