"பாசந்தி பால் விரும்பிய ஜெயலலிதா - கண்ணீருடன் கூறும் செவிலியர்கள்

First Published Dec 8, 2016, 10:07 AM IST
Highlights


அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பாசந்தி பால் விரும்பி கேட்டதாக, அங்கு வேலை செய்த செவிலியர்கள் கூறினர்.

கடந்த மாதம் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சிறப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்ட பிறகு மறைந்த முதல்வர் ஜெயலலிதா பாசந்தி பால் விரும்பிச் சாப்பிட்டார்'' என்று அப்பல்லோ மருத்துவமனை ஊழியர்கள் கூறுகின்றனர்.

கடந்த செப்டம்பர் 22ம் தேதி உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்து, உடல் நலன் தேறி சிறப்புப் பிரிவுக்கு கடந்த நவம்பர் 19ம் தேதி மாற்றப்பட்டார்.

அவரது சிகிச்சைக்கு 16 செவிலியர்கள் உறுதுணையாக இருந்தனர்.
சிறப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்ட பிறகு உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உணவை தாமே எடுத்துச் சாப்பிடத் தொடங்கினார் ஜெயலலிதா.

தனக்கு பிடித்தமான பாசந்தி பால், உப்புமா, பொங்கல், தயிர் சாதம் உள்ளிட்டவற்றை சாப்பிட தொடங்கினார். உணவு சாப்பிட வேண்டிய அவசியத்தை மருத்துவர்கள் வலியுறுத்தியதை தொடர்ந்து, சிறிது சிறிதாக சாப்பிட தொடங்கினார்.

இவ்வாறு செவிலியர்கள் கூறினர்.

click me!