நள்ளிரவில் மேம்பாலத்தில் நெருப்பு விளக்குகளை பறக்க விட்டு தோழியின் பிறந்தநாளை வாலிபர்கள் சிலர் கொண்டாடினார்கள். இதுபோன்று ஆபத்தை உணராமல், விபரீத செயல் பெரும் விபத்தை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்துகின்றனர்.
நள்ளிரவில் மேம்பாலத்தில் நெருப்பு விளக்குகளை பறக்க விட்டு தோழியின் பிறந்தநாளை வாலிபர்கள் சிலர் கொண்டாடினார்கள். இதுபோன்று ஆபத்தை உணராமல், விபரீத செயல் பெரும் விபத்தை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்துகின்றனர்.
கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வடகோவை மேம்பாலத்தில், இரவு நேரங்களில் வாகன போக்குவரத்து மிகவும் குறைந்து காணப்படும். இதனால், அவ்வழியாக செல்வோர் அச்சத்துடன் செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று இரவு ஒரு இளம்பெண் மற்றும் 3 வாலிபர்கள் அந்த மேம்பாலத்துக்கு பைக்கில் சென்றனர். அங்கு பைக்கை நிறுத்திவிட்டு, கீழே இறங்கிய அனைவரும், சாலையில் ஒரு சிறிய லாந்தர் விளக்கை வைத்து எரித்தனர்.
undefined
பின்னர், அந்த லாந்தர் விளக்கை பற்ற வைத்து, அதில் வடிவமைக்கப்பட்டு இருந்த பாலித்தீன் கவரை இணைத்து, தீயில் பறக்க விட்டனர். ஆனால் அந்த தீ உயரே பறக்காமல் பாலத்தின் கீழ் வாகனங்கள் செல்லும் சாலையின் ஓரத்தில் விழுந்தது. இதுபற்றி அந்த வாலிபர்களிடம், வாகன ஓட்டிகள் கேட்டதற்கு, தோழியின் பிறந்தநாளை கொண்டாடுவதாக தெரிவித்தனர்.
இந்த பாலத்தின் அருகில் ஏராளமான குடியிருப்புகள், மரங்கள் உள்ளன. இந்த பகுதியில் சிறிய நெருப்பு பொறி விழுந்தாலும், பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆனால், நெருப்புடன் கூடிய லாந்தர் விளக்கை பறக்க விட்டு, மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் இளைஞர்கள் அத்துமீறலை அவர்கள் உணர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.