பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு வளாகத்திற்கு "புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்" பெயர்; அரசாணை வெளியீடு...

 |  First Published Jan 17, 2018, 10:15 AM IST
MGR Name for Perambalur District Sports Complex collector announced



பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு வளாகத்துக்கு பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் விளையாட்டு வளாகம் என்று பெயர் சூட்டி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று ஆட்சியர் வே.சாந்தா தெரிவித்தார்.

Latest Videos

undefined

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், "பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் 10 ஏக்கர் நில பரப்புடன் மாவட்ட விளையாட்டு மைதானம் உள்ளது.

இந்த வளாகத்தில் 400 மீ. தடகள ஓடு பாதை, கால்பந்து மைதானம், கையுந்து பந்து, கைப்பந்து மைதானம், மின்னொளியுடன் கூடிய  டென்னிஸ் மைதானம், கோ-கோ மைதானம், இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கம், கூடைப்பந்து மைதானம், குளிர்சாதன வசதியுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடம், பார்வையாளர்கள் அமரக்கூடிய இருபுறமும் உள்ள கேலரி, விழா மேடை, கட்டப்பட்டு வரும் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம், நீச்சல் குளம், மகளிர் விளையாட்டு விடுதி உள்ளிட்ட வசதிகள் உள்ளது.

பெரம்பலூரில் கடந்த 5.8.2017-ல் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர்  எடப்பாடி கே.பழனிசாமி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்திற்கு "பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் விளையாட்டு வளாகம்" என்று பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார்.  

அதன்படி, பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தின் பெயர் மாற்றப்பட்டு அண்மையில் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.  எனவே, இனிவரும் காலங்களில் மாவட்ட விளையாட்டு வளாகத்தை, பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் விளையாட்டு வளாகம் என்று அழைக்கப்படும்" என்று அதில் தெரிவித்து இருந்தார்.

 

click me!