அடித்த காற்றில் மெயின்ரோட்டில் இருந்த மரமே வேறோடு சாய்ந்தது;

 
Published : Mar 06, 2017, 09:11 AM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
அடித்த காற்றில் மெயின்ரோட்டில் இருந்த மரமே வேறோடு சாய்ந்தது;

சுருக்கம்

Meyinrot sided with the tree in the air to score differently

தாரமங்கலம்

தாரமங்கலத்தில் பெய்த பலத்த மழையின்போது அடித்த காற்றில் பிரதான சாலையில் இருந்த மரம் வேறோடு சாய்ந்து விழுந்ததில் போக்குவரத்து முடங்கியது.

தாரமங்கலத்தில் நேற்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை பெய்த பலத்த மழையின்போது வீசிய பலத்த காற்று வீசியது.

இதில், தாரமங்கலம் கால்நடை மருத்துவமனை அருகே சங்ககிரி பிரதான சாலையில் இருந்த பெரிய மரம் சாலையில் சாய்ந்து விழுந்தது.

இந்தச் சாலை வழியாகத்தான் கோவை, ஈரோடு ஆகிய பகுதிகளில் இருந்து பெங்களூருவுக்கு லாரிகள் செல்லும். இந்த மரம் சாய்ந்ததால், ஏராளமான லாரிகள் நகர முடியாமல் அப்படியே நின்றுவிட்டன. சாலையின் இருபுறமும் வாகனங்கள் அங்குமிங்கும் செல்ல முடியாமல் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

நேற்று விடுமுறை தினம் என்பதால் அரசு சார்பில் ஊழியர்கள் யாரும் மரத்தை அகற்ற வரவில்லை. இதனால் நிலைமை இன்னும் மோசமானது.

எனவே, லாரி ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுச் சேர்ந்து சாலையில் கிடந்த மரத்தை அகற்றினார்கள். சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக இந்தப் பனியில் மக்கள் ஈடுபட்டனர். அதன் பின்னரே, போக்குவரத்து சீரானது.

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
2026 புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!