ஏ.ஆர் ரஹ்மானுக்காக ரயில் நேரத்தை மாற்றிய மெட்ரோ ரயில் நிர்வாகம்..? எதற்காக தெரியுமா.?

By Ajmal Khan  |  First Published Mar 17, 2023, 2:57 PM IST

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளதையொட்டி சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் வருகின்ற 19.03.2023 (ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில்  நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி

தமிழ் சினிமாவில் லைட்மேன்களுக்கு உதவும் வகையில், வரும் மார்ச் 19 ஆம் தேதி சென்னை இசை நிகழ்ச்சி ஒன்றை இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் நடத்துகிறார். இதனை பார்க்க ஏராளமான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இரவு 11 மணியுடன் மெட்ரோ ரயில் சேவயை இரவு 12 மணி வரை நீட்டித்து மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வெளிப்புற பங்குதாரர் மார்க் மெட்ரோ நிறுவனத்தின் சார்பில் நேரு உள்விளையாட்டு அரங்கில் ஏ.ஆர்.ரஹமான் இசை நிகழ்ச்சி (அன்பின் சிறகுகள்- Wings of Love) 19.03.2023 (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணி முதல் 11:30 மணி வரை நடைபெறுகிறது. 

Tap to resize

Latest Videos

பெண் காவலர்களுக்கான பணி நேரம் மாற்றம்..! அதிரடியாக உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மெட்ரோ ரயில் சேவை

இந்நிகழ்ச்சி டாக்டர் எம். ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு அருகில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளதால் நிகழ்ச்சியை கண்டுகளிக்க வரும் மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக 19.03.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இரவு 11:00 மணி வரை இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவைகள் அன்று மட்டும் நள்ளிரவு 12:00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள், மார்ச் 19. 2023 அன்று (ஞாயிற்றுக்கிழமை) மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், 

சிறப்பு சலுகை அறிவித்த மெட்ரோ

பல்வேறு இடங்களில் இருந்து நிகழ்ச்சியை கண்டுகளிக்க மெட்ரோ இரயில்களில் வரும் மெட்ரோ பயணிகள், கயுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை (Travel Card) பயன்படுத்தி 20% கொள்ளபடுகிறார்கள். கட்டணத் தள்ளுபடியை பெற்றுகொள்ளுமாறு கேட்டுக் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாகன இணைப்பு சேவை 19.03.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையம் முதல் நேரு உள்விளையாட்டு அரங்கம் வரை மாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும். அதன்படி, அனைத்து முனையங்களிலிருந்தும் (விமான நிலைய மெட்ரோ, விம்கோ நகர் பணிமனை மெட்ரோ, டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ, பரங்கிமலை மெட்ரோ) கடைசி இரயில் 19.03.2023 (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12:00 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

இசை நிகழ்ச்சியின் மூலம் நிதி திரட்டி லைட்மேன்களை காப்பாற்றும் ஏ ஆர் ரஹ்மான்!

 

click me!