அச்சுறுத்தும் புயல்..! நாளை தொடங்குகிறது கன மழை..! தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் வெளியிட்ட வானிலை மையம்

By Ajmal KhanFirst Published Dec 6, 2022, 9:57 AM IST
Highlights

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது மேலும் புயலாக வலுவடைந்து வட தமிழ்நாடு - தெற்கு ஆந்திர இடையே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதால் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

தீவிரம் அடையும் புயல்

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரம் அடைந்து வரும் நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று காலை வெளியிட்ட வானிலை முன்னறிவிப்பில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நேற்று காலை உருவாகியுள்ள குறைந்த காற்று தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வரும் 6 ஆம் தேதி மாலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என கூறப்பட்டுள்ளது. 

தி.மலை தீபத் திருவிழா..! அதிகாலையில் ஏற்றப்பட்ட பரணி தீபம்..! அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம்

இதனையடுத்து காற்றின் திசைக்கு ஏற்ப மேற்கு வட மேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து, புயலாக வலுப் பெற்று தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வட தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வரும் 8 ஆம் தேதி காலை கரையை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும் இது படிப்படியாக அதிகரித்து 8 ஆம் தேதி அதி கன மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து 9 ஆம் தேதி தமிழகம் மற்றும் தெற்கு கடலோர ஆந்திரா கேரளா ஆகிய பகுதிகளில் கன முதல் மிக கனமழையும் 10 ஆம்தேதி கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆளுநரை திரும்ப பெறக்கோரி முற்றுகை போராட்டம்..! ஒன்றன் பின் ஒன்றாக களத்தில் குதிக்கும் திமுக கூட்டணி கட்சிகள்

நாளை மறுநாள் (8அம் தேதி) வங்கக்கடலில் 70 முதல் 80 கிலோமீட்டர் வேகமும், இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை மற்றும் நிர்வாகப் பணிகளுக்காக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. . 

இதையும் படியுங்கள்

தமிழகத்தை மிரட்டும் புயல்..! 6 மாவட்டங்களுக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்பு படை

click me!