3வது நாளாக ஒளிமயமானது மெரினா  

Asianet News Tamil  
Published : Jan 19, 2017, 07:35 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
3வது நாளாக ஒளிமயமானது மெரினா  

சுருக்கம்

3வது நாளாக ஒளிமயமானது மெரினா  

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும்,பீட்டாவிற்கு தடை விதிக்க வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவியர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை மெரினாவில் இளைஞர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம்  இன்று 3 வது நாளாக நீடித்து வருகிறது. நேற்று முன்தினம் மெரினாவில் நடைபெற்ற போராட்டத்தில் மின்சாரம் தடைபட்டது. அப்போது தங்களின் செல்போனில் உள்ள டார்ச் மூலம் போராட்டத்தை தொடர்ந்தனர். 

 

நேற்றும் இன்றும் மெரினாவில் போராட்டம் நடந்து வருகிறது. இருள் வந்த பிறகும் மெரினாவில் தெருவிளக்குகள் எரியவில்லை இதனால் இளைஞர்கள் தங்களின் செல்போன் வெளிச்சத்தில் போராட்டத்தை தொடர்கின்றனர்.ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால், அதற்காக அவசர சட்டம் எதுவும் பிறப்பிக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி நிலையில் ஜல்லிக்கட்டு அனுமதி, பீட்டாவை தடை விதிக்கும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் தங்கள் குறிக்கோளில் நிலையாக உள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

திமுகவில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகி.. கனிமக் கொள்ளை.. முதல்வர் ஸ்டாலின் மீது பரபரப்பு புகார்!
7 மாவட்டங்களில் துவம்சம் பண்ணப்போகும் கனமழை.. பொங்கல் அன்று மழை பெய்யுமா? வானிலை அப்டேட்!