மீண்டும் வருகிறது பருவமழை…!!! ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதா…??? ஆலோசனை கூட்டம்

First Published Nov 29, 2016, 3:07 PM IST
Highlights


பருவ மழை தொடங்வுள்ளதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் இன்று அதிகாரிகளுடன் ஆசோனை நடத்தினார்.

கடந்த வருடம் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த பேய் மழை காரணமாக சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் , கடலூர் ஆகிய மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளித்தன.

லட்சக்கணக்கான மக்கள் தங்களது உடைமகைளை இழந்து வீடு, வாசல் உள்ளிட்டவற்றை இழந்து உண்ண உணவு இன்றி கடும் இன்னல்களை சந்தித்தனர்.

பின்னர் ராணுவத்தினர், மீட்பு படையினர் மூலம் அவர்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இதையடுத்து, தண்ணீர் வெளியேற்றியதை அடுத்து பொதுமக்கள் மீண்டும் தங்களது வீடுகளுக்கு திரும்பினர்.

இந்நிலையில், டிசம்பர் 1ம் தேதி பருவ மழைய பெய்ய உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளதையடுத்து, சென்னை தலைமை செயலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தலைமையில் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஏரிகள், குளம் குட்டைகள் தூர்வாரப்பட்டதா என்றும் பருவ மழைய தொடர்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

முன்னதாக, கடந்த வருடம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி, ஐ.ஏ.எஸ். அமுதா, தலைமையில் மற்றொரு அதிகாரி ராஜாராம் மேற்பார்வையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஏரிகள், குளங்கள் நீர்வரத்து கால்வாய்கள் அனைத்தும் அகற்றம் செய்ய ஆய்வு செய்யப்பட்டது,.

அதில் ஒரு சில இடங்களில் மட்டுமே ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டன. மீதமுள்ள இடங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்துறையினரிடம் ஒப்படைக்கப்ட்டது.

ஆனால், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை அப்பணியை செய்யவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனால் இந்த ஆண்டு வரும் பருவமழையில் மீண்டும் கடந்த வருடம் ஏற்பட்ட அதே நிலை வருமோ என பொதுமக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.  

click me!