கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல்.. பக்தர்களுக்கு அனுமதியில்லை.. ஆட்சியர் திடீர் உத்தரவு..

Published : Apr 15, 2022, 12:53 PM IST
கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல்.. பக்தர்களுக்கு அனுமதியில்லை.. ஆட்சியர் திடீர் உத்தரவு..

சுருக்கம்

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வில் வைகையாற்றில் மக்கள் யாரும் இறங்க அனுமதியில்லை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் வைகையாற்றில் அதிகளவில் தண்ணீர் வருவதால், கரையோரங்களில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வில் வைகையாற்றில் மக்கள் யாரும் இறங்க அனுமதியில்லை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் வைகையாற்றில் அதிகளவில் தண்ணீர் வருவதால், கரையோரங்களில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5- ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு முக்கிய நிகழ்வுகளில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்,  தேரோட்டம், கள்ளழகர் ஆற்றில் இறங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நேற்று மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் பக்தர்கள் புடை சூழ வெகு விமர்சையாக நடைபெற்றது. சித்திரைத் திருவிழாவின் 11-வது நாளான இன்று மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு மேல் சுந்தரேசப்பெருமான் பிரியாவிடையுடன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். 

கீழமாசி வீதியிலிருந்து புறப்பட்ட தேர் தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்குமாசி வீதிகளில் வலம் வந்தது. பல்லாயிரக்காண பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். சித்திரை திருவிழாவையொட்டி,கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நாளை நடைபெற உள்ளது.  முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கொள்வர். நாளை அதிகாலை 5.50 மணி முதல் 06.20 மணிக்குள் வைகை ஆற்றில் தங்ககுதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளுகிறார்.


 முன்னதாக சுந்தரராஜ பெருமாள் மூலஸ்தனத்திலிருந்து  நேற்று 6.30 மணியளவில் தங்க பல்லக்கில் அழகர் புறப்பட்டு,  இன்று அதிகாலை மதுரை வந்தடைந்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, நாளை அதிகாலை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது. இதனையொட்டி, மக்களும் ஏராளமானோர் ஆற்றில் இறங்குவர். இந்நிலையில் வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகமாக இருப்பதால்,பொது மக்கள் ஆற்றில் இறங்க அனுமதியில்லை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் ஆற்றின் கரையோரங்களில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தற்குறி.. ஒத்தைக்கு ஒத்தை வாடா.... தரை லோக்கலா அடித்து கொள்ளும் சாட்டை - நாஞ்சில் சம்பத்
50 தொகுதிகளை கேட்டு அடம் பிடிக்கும் பாஜக.. முப்பதே ஓவர்.. கறார் காட்டும் எடப்பாடி..!