Medical Counselling: மருத்துவப் படிப்பில் பொதுப்பிரிவு கலந்தாய்வு..செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்.. முழு விவரம்

Published : Jan 30, 2022, 07:57 PM IST
Medical Counselling: மருத்துவப் படிப்பில் பொதுப்பிரிவு கலந்தாய்வு..செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்.. முழு விவரம்

சுருக்கம்

மருத்துவப் படிப்பில் பொதுப்பிரிவு கலந்தாய்வுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது.  

மருத்துவப்படிப்பு கலந்தாய்வில் கலந்துக்கொள்ளும் மாணவர்கள், பிப்ரவரி 1 ஆம்  தேதி இரவு 12 மணி வரை tnmedicalselection.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். அப்போது, அதற்கான மையங்களுக்கு மாணவர்கள் நேரில் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.யாருக்கு எந்தெந்த இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று முடிவுகள், பிப்ரவரி 15 ஆம் தேதி வெளியாகும்.இதனையடுத்து பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் கல்லூரிக்கு சென்று அசல் சான்றிதழை சமர்பித்து மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரலாம்  

தமிழ்நாட்டில், மருத்துவப்படிப்பிற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வில் சில மாற்றங்களை செய்து மருத்துவக்கல்வி இயக்ககம் அட்டவணை வெளியிட்டுள்ளது.மருத்துவப்படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வின் முதல்சுற்று முடிவுகள் சனிக்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிப்ரவரி ஒன்றாம் தேதி வெளியாகின்றன. 

இதனை ஒட்டி தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்குநரகம், ஏற்கெனவே வெளியிட்ட மருத்துவக் கலந்தாய்வு அட்டவணையில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது, புதிய அட்டவணைப்படி இன்று காலை 10 மணி முதல் பிப்ரவரி ஒன்றாம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை கலந்தாய்வுக்கு ஆன்லைனில் பதிவு செய்யலாம். பிப்ரவரி 2ம் தேதி காலை 8 மணி முதல் 5-ம் தேதி மாலை 5 மணி வரை விருப்பக் கல்லூரிகளை தேர்வு செய்யலாம். ஏற்கெனவே வெளியிட்ட அட்டவணையில், 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்க்கப்படும் என கூறப்பட்டது. 

தற்போது, பிப்ரவரி 7 முதல் 10ம் தேதி வரை சான்றிதழ்கள் சரி பார்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இடங்கள் ஒதுக்கீடு தொடர்பான முடிவுகள் பிப்ரவரி 12ம் தேதிக்கு பதில் 15ம் தேதிக்கு வெளியிடப்படும். மருத்துவ இடம் ஒதுக்கீட்டிற்கான ஆணையை மாணவர்கள் 16ம் தேதி பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.ஏற்கெனவே பிப்ரவரி 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை அசல் சான்றிதழுடன் சென்று கல்லூரியில் சேரலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, பிப்ரவரி 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை கல்லூரிகளில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வு விவரங்கள், சுகாதாரத்துறை இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. tnhealth.tn.gov.in/,  tnmedicalselection.netஆகிய சுகாதாரத்துறை இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளதன. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
கலைஞருக்கு பாரத ரத்னா விருது வேண்டும்.. மக்களவையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை