அடுத்த 2 மணி நேரத்திற்கு.. 17 மாவட்டங்களில் மழை கொட்டி தீர்க்கப்போகுது.. வானிலை மையம் எச்சரிக்கை !

By Raghupati RFirst Published Dec 11, 2022, 5:27 PM IST
Highlights

தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்கிழக்கு வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் ஒன்பதாம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு மேல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது.

வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை, திருவள்ளூர், சேலம், தருமபுரி, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க.. பால் விற்பனையாளர் முதல்வரானது எப்படி ? இமாச்சல பிரதேசத்தின் புதிய முதல்வர்.. யார் இந்த சுக்விந்தர் சிங் சுகு ?

வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை முதல் வருகிற 15ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்’ என்றும் கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க.. பொய் வாக்குறுதி.. குறுக்கு வழி அரசியல்வாதிகளிடம் உஷாராக இருங்கள்.! எதிர்கட்சிகளை அதிரவைத்த பிரதமர் மோடி

click me!