தமிழ்நாடு முழுவதும் களைகட்டிய மாட்டுப் பொங்கல்.. கால்நடைகளுக்கு நன்றி செலுத்தி உற்சாகம்..

By Ramya sFirst Published Jan 16, 2024, 10:10 AM IST
Highlights

தமிழகம் முழுவதும் இன்று மாட்டுப்பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. போகி, பொங்கல் பண்டிகையை தொடர்ந்து இன்று மாட்டு பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. உழவுக்கு உதவும் கால்நடைகளை போற்றும் வகையில் இந்த மாட்டுப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

மாடு, ஆடு போன்ற கால்நடைகளை வளர்ப்போர் அவற்றை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு சீவி, வண்ணம் பூசி, சலங்கை கட்டி அலங்கரித்து இந்த நாளை உற்சாகமாக கொண்டாடுவார்கள். பொங்கல் தினத்தன்று எப்படி பொங்கல் வைத்து சூரியனை வழிபடுகின்றனரோ அதே போல் மாட்டுப்பொங்கல் தினமான இன்று பொங்கல் வைத்து கால்நடைகளை வழிபடுவது வழக்கம்.

 

மாட்டுப் பொங்கல் 2024 : மாட்டுப் பொங்கல் ஏன் கொண்டாடப்படுகிறது? அதன் முக்கியத்துவம் என்ன?

மாடுகள் வசிக்கும் தொழுவத்தை சுத்தம் செய்து, அலங்கரித்து பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெறும். விவசாயிகளின் நண்பன், உழவனின் உயிர்த்தோழனாக இருந்து உழைத்த கால்நடைகளை போற்றி நன்றி கூறும் வகையில் பொங்கல் வைத்து விருந்து படைத்து விவசாயிகள் வழிபடுகின்றனர். மாட்டுப் பொங்கல் அன்று பொங்கல் பொங்கினால் பட்டி பெருகும் என்பது ஐதீகம்.

பாலமேடு ஜல்லிக்கட்டு 2024.. வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகள்.. தீரத்துடன் அடக்கும் வீரர்கள்..

அதன்படி இன்று தமிழகம் முழுவதும் மாட்டுப்பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாடுகளின் உரிமையாளர்கள் இன்று மாடுகளின் தொழுவத்தை சுத்தம் செய்து, மாடுகளை குளிப்பாட்டி, அவற்றின் கொம்புகளை சீவி வர்ணம் பூசி கொம்பில் சலங்கை கட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மாடுகளின் நெற்றில் திருநீர் மற்றும் குங்குமம் வைத்து அழகு சேர்த்தனர். மேலும் மாடுகளுக்கு புதிய மூக்கணாங் கயிறு, தாம்பு கயிறுகளை அணிவித்தும் உழவு பொருட்களை வைத்து வழிபாடு செய்து மாடுகளுக்கு பொங்கல் கரும்பு வாழைப்பழம் ஆகியவற்றை ஊட்டி மாட்டுப்பொங்ல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றன

click me!