திடீர் பரபரப்பு.. தமிழகம் முழுவதும் தீப்பெட்டி உற்பத்தி நிறுத்தம்.. மூடப்பட்ட ஆலைகள்..

By Thanalakshmi VFirst Published Apr 6, 2022, 11:01 AM IST
Highlights

மூல பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கோவில்பட்டி உட்பட தமிழகம் முழுவதும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் லைட்டர்களுக்கு தடைவிதிக்கவும் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தீப்பெட்டி உற்பத்தி நிறுத்தம்:

மூல பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கோவில்பட்டி உட்பட தமிழகம் முழுவதும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் லைட்டர்களுக்கு தடைவிதிக்கவும் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் மொத்தம் 50 முழு இயந்திர தீப்பெட்டி ஆலைகள், 300 பகுதி நேர இயந்திர தீப்பெட்டி ஆலைகள் மற்றும் 2000-க்கும் தீப்பெட்டி பேக்கிங் சார்பு ஆலைகள் என செயல்பட்டு வருகின்றன. பாஸ்பரஸ், குளோரைட், மெழுகு, அட்டை, பேப்பர் ஆகியவை தீப்பெட்டி உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருள்களாக தேவைப்படுகின்றன. இந்நிலையில் இந்த பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலப்பொருட்கள் விலை உயர்வு:

இதனால் பொருளாதார ரீதியாக  தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். இதனிடயே பல ஆண்டுகளாக தீப்பெட்டி ஒன்றின் விலை ரூ1க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ரூ 1க்கு விற்பனை செய்யப்பட்ட தீப்பெட்டியின் விலை, ரூ 2 என தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் உயர்த்தினர். இருப்பினும் தீப்பெட்டி உற்பத்தி மூலப்பொருள்களின் விலை 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை, கடந்த மூன்று மாதங்களில் கடுமையாக உயர்ந்துள்ளதால் பெரும் நெருக்கடியை சந்தித்து வருவதாக உற்பத்தியாளர் கூறுகின்றனர். 

ஒரு நாளைக்கும் 7 கோடி ரூபாய் இழப்பு:

இதையெடுத்து கடந்த 22-ம் தேதி நடைபெற்ற தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் 600 தீப்பெட்டி கொண்ட பண்டல் விலையை 300 ரூபாயில் இருந்து 350 ஆக உயர்த்த முடிவு செய்தனர். ஏப்ரல் 1 முதல் இந்த விலை நடைமுறைக்கு வரும் என்று அறிவித்து இருந்தனர். ஆனால் இந்த முடிவினை மொத்த வியாபாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இச்சூழலில் தான், கடந்த 1 ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஏப்ரல் 6 முதல் 17ம் தேதி வரை ஆலைகளை மூடி உற்பத்தியை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. இதனால் இன்று முதல்  தமிழகம் முழுவதும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அதன் படி, கோவில்பட்டி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட நகரங்களில் தீப்பெட்டி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 
இதனால் ஒரு நாளைக்கு 7 கோடி ரூபாய் வரை உற்பத்தி பாதிப்பு ஏற்படும் எனவும் நேரிடையாக, மறைமுகமாக 6 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சீனா லைட்டர்களுக்கு தடை?:

மத்திய, மாநில அரசுகள் பல சலுகைள் வழங்கியுள்ளதாகவும், சீனாவில் இருந்து அனுமதி இல்லமால் இந்தியாவிற்கு வரும் லைட்டர்கள் காரணமாக 30சதவீதம் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சீனாவில் இருந்து இறக்குமதியாகும் லைட்டர்களுக்கு தடைவிதிக்கவும் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

click me!