ரேஷன் கடைகளில் மசூர் பருப்பு நிறுத்தம்! நச்சுத்தன்மை உள்ளதாக கூறி உணவுத்துறை நடவடிக்கை!

 
Published : Feb 06, 2018, 04:17 PM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
ரேஷன் கடைகளில் மசூர் பருப்பு நிறுத்தம்! நச்சுத்தன்மை உள்ளதாக கூறி உணவுத்துறை நடவடிக்கை!

சுருக்கம்

Masoor Dal Delivery stop

மசூர் பருப்பு நச்சுத்தன்மை மிகுந்தது என்றும் ரேஷனில் விநியோகம் செய்யக்கூடாது என்றும் கூறப்பட்டு வந்த நிலையில், ரேஷன் கடைகளில் மசூர் பருப்பு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மசூர் பருப்பு நச்சுத்தன்மை மிகுந்தது என்றும், இதனால் நோய்கள் வரக் கூடும் என்றும் புகார்கள் வந்ததால், மசூர் பருப்பு விநியோகம் நித்தப்பட்டுள்ளதாக உணவுத்துறை கூறியுள்ளது.

சிவகங்கை கழனிவாசலை சேர்ந்த ஆதிஜெகநாதன், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் பொதுவிநியோக திட்டத்தின்கீழ் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு வழங்குவதற்காக மசூர் பருப்பு கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த மசூர் பருப்பு நச்சுத்தன்மை கொண்டது. இதை சாப்பிட்டால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். எனவே, மசூர் பருப்பு கொள்முதல் செய்ய அனுமதி வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணையையும், மசூர் பருப்பு கொள்முதல் டெண்டர் அறிவிப்பையும் ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மசூர் பருப்பு கொள்முதல் செய்வதற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பருப்பின் தரத்தை ஆய்வு செய்வதற்கு பல்வேறு தொழில்நுட்பங்கள் உள்ளன. அந்த தொழில் நுட்பங்களைப் பயன்படுத்த பருப்புகளின் தரம் ஆய்வு செய்யப்பட்டே விநியோகம் செய்யப்படும் என்று தெரிவித்தார். அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதத்தையேற்ற நீதிபதிகள், மசூர் பருப்பு கொள்முதலுக்கு விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக ரேஷன் கடைகளில் மசூர் பருப்பு விற்பனை செய்ய்ப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் மசூர் பருப்பு விநியோகத்தை தமிழக உணவு துறை நிறுத்தியுள்ளது. மசூர் பருப்பு குறித்து புகார்கள் வருவதாகவும், இதனால் பல்வேறு  விநியோகத்தை திரென நிறுத்தியது மசூர் பருப்பு அருந்துவதால் பல்வேறு நோய்கள் வரக் கூடும என்றும் மசூர் பருப்பு நச்சுத்தன்மையானது என்றும் தமிழக உணவுத்துறைக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, ரேஷன் கடைகளில் மசூர் பருப்பு விநியோகத்தை தமிழக உணவுத்துறை நிறுத்தியுள்ளது. ரேஷன் கடைகளில் ஏற்கனவே துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது மசூர் பருப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பள்ளிகளுக்கு கொத்தாக 9 நாட்கள் விடுமுறை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மாணவர்கள், ஆசிரியர்கள் கொண்டாட்டம்!
மகாத்மா காந்தி மீது வன்மம்.. 100 நாள் வேலை திட்டம் மாற்றத்துக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!