சற்றுமுன் முக்கிய தகவல்..மீண்டும அதிகரிக்கும் கொரோனா..முக கவசத்திலிருந்து விலக்கு இல்லை.. அமைச்சர் பேட்டி..

By Thanalakshmi VFirst Published Apr 20, 2022, 11:06 AM IST
Highlights

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மக்கல் பொதுஇடங்களில் முக கவசம் அணிந்து கொள்ளுவதிலிருந்து அரசு எந்தவித விலக்கும் அளிக்கவில்லை என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். ஆனால் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என்ற கெடுபிடியிலிருந்து மட்டுமே விலக்களிக்கப்பட்டுள்ளது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
 

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மக்கல் பொதுஇடங்களில் முக கவசம் அணிந்து கொள்ளுவதிலிருந்து அரசு எந்தவித விலக்கும் அளிக்கவில்லை என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். ஆனால் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என்ற கெடுபிடியிலிருந்து மட்டுமே விலக்களிக்கப்பட்டுள்ளது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "டெல்லி, ஹரியாணா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே இதுவரை ஒரு தவணை கூட தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனே தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மேலும் மாவட்டந்தோறும் மீண்டும் தடுப்பூசி முகாம் தேவைபட்டால் நடத்தப்படும் என்று கூறினார்.

கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையான முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்டவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மேலும் முக கவசம் அணிவதிலிருந்து மக்களுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. எனவே வெளியில் வரும் போது அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்துக்கொள்ள வேண்டும். இருப்பினும், அரசு, முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என்ற கெடுபிடியிலிருந்து மட்டுமே விலக்களித்துள்ளது என்று அமைச்சர் விளக்கமளித்தார்.

இதற்கிடையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கொரோனா கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த வேண்டும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில்,தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த வாரங்களில் 25 க்கும் குறைவாக பதிவான நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.  எனவே மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்களை கடுமையாக்கும் படியும், கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தும் படியும் அதில் குறிப்பிட்டுள்ளார்.  மேலும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்றும் அந்த சுற்றறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

சீனா, ஆஸ்திரேலியா, பிரிட்ட உள்ளிட்ட நாடுகளில் கொரோனா ஒமிக்ரான் வைரஸின் XE திரிபால் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. சீனாவில் கொரோனா பரவலை கட்டுபடுத்தும் வகையில் கடுமையான ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, கடந்த சில நாட்களாக 1000க்கும் மேல் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகிறது. இந்தியாவில் ஜூன் மாதம் அடுத்த கொரோனா அலை பாதிப்பு ஏற்படலாம் எனக் கூறப்படும் நிலையில் மக்கள் முகக்கவசம் அணிவதை, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதைக் கைவிடக் கூடாது என மத்திய சுகாராத அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 27 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 30 ஆக அதிகரித்துள்ளது.சென்னையில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று பாதிப்பு 17 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. கொரோனாவிற்கு 235 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க: அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு...! முக கவசம் கட்டாயம்.. மாவட்ட ஆட்சியர்களுக்கு ராதாகிருஷ்ணன் அவசர கடிதம்

click me!