
இராமநாதபுரம்
இராமேசுவரம் நகராட்சியில் பல மடங்கு வரி உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரச்சார இயக்கத்தைத் தொடங்கினர்.
இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம் நகராட்சியில் பல மடங்கு வரியை உயர்த்தியைக் கண்டித்தும், அதனை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பிரச்சார இயக்கம் தொடங்கியது.
இந்தப் பிரச்சார இயக்கத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.ஆர்.செந்தில்வேல் தலைமைத் தாங்கினார்.
இராமேசுவரம் நகராட்சியில் பல மடங்கு வரியை உயர்வால் எளிய மக்கள் முதல், சிறு, குறு வணிகர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். நகராட்சியின் இந்தச் செயல் கண்டித்தக்கது. எனவே, மக்களை பாதிப்படையச் செய்யும் வரி விதிப்பை உடனே திரும்ப பெற வேண்டும் என்று இந்த பிரச்சார இயக்கத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்த பிரச்சாரத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கருணாகரன், தாலுகா குழு உறுப்பினர்கள் எம்.பி.செந்தில், ஏ.அசோக், மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.