
கொல்கத்தா உயர்நீதிமன்ற ஒய்வு நீதிபதி கர்ணன் நாளை விடுதலை செய்யப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்தவரும், கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான சி.எஸ்.கர்ணன், தன் பதவிக்காலத்தில் சக நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது அவதூறு புகார்கள் தெரிவித்ததாகக் கூறி, அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது.
இந்த வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்காததால், கர்ணன் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகளை விமர்சித்து பேசியதற்காக நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து ஜூன் 20ம் தேதி கைது செய்யப்பட்ட நீதிபதி கர்ணன் கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் தண்டனை காலம் முடிவடைவதால் நாளை நீதிபதி கர்ணன் விடுதலை செய்யப்படவுள்ளார்.