டியூசன் படிக்க வந்த இடத்தில் திருமணமான ஆசிரியையுடன் காதல்; சேர்த்து வைக்க கோரி மாணவன் தற்கொலை மிரட்டல்!

 
Published : Jun 30, 2018, 05:46 PM ISTUpdated : Sep 19, 2018, 02:35 AM IST
டியூசன் படிக்க வந்த இடத்தில் திருமணமான ஆசிரியையுடன் காதல்; சேர்த்து வைக்க கோரி மாணவன் தற்கொலை மிரட்டல்!

சுருக்கம்

married teacher Love Student suicide threat

கற்கபோன இடத்தில் காதல் மலர்ந்ததால் ஆசிரியையுடன் சேர்த்து வைக்க கோரி மாணவர் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவருக்கும் பெங்களூரை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 வயதில் மகன் உள்ளான்.இளம்பெண் பெங்களூர், அல்சூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், பிளஸ் 1 கணக்கு ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் கணவர் ரவி, வில்சன் கார்டனில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இந்த வகுப்பில் படிக்கும் ஒரு மாணவனை அவரது பெற்றோர் கணக்கு பாடம் டியூசன் படிக்க ஆசிரியையிடம் அனுப்பினர். அப்போது, பிரியாவுக்கும், மாணவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இதையறிந்த கணவர், இருவரையும் கண்டித்தார்.  கடந்த மாதம் ஆசிரியை, தனது குழந்தையுடன் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர் பல இடங்களில் தேடியபோது மனைவி, மாணவனுடன் மாயமானது தெரியவந்தது. அவரது கணவர் கொடுத்த புகார்படி, பெங்களூரு போலீசார், கடந்த, 10-ல், மைசூரில் தனிக்குடித்தனம் நடத்திய இருவரையும் மீட்டனர்.பின்னர், அவர்களுக்கு அறிவுரை கூறி ஆசிரியையை அவரது கணவரிடமும், மாணவனை அவனது பெற்றோரிடமும் ஒப்படைத்தனர். ஆனாலும் எதிர்ப்புகளை மீறி இருவரும் தொடர்ந்து சந்தித்து வந்தனர். இதனால், ஆசிரியையின் கணவர், தனது மனைவியை அவரது தாய் வீடான குடியாத்தத்துக்கு அனுப்பி வைத்தார். இதையறிந்த அந்த மாணவன் தனது பெற்றோருக்கு தெரியாமல் நேற்று முன்தினம் குடியாத்தம் பகுதியில் உள்ள ஆசிரியை வீட்டை தேடி வந்துள்ளார். அப்போது ஆசிரியையின் பெற்றோர் அந்த மாணவனை பிடித்து குடியாத்தம் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். பின்பு போலீசார் அறிவுரை கூறினர். 

 ஆனால் அந்த மாணவன், ‘ஆசிரியையுடன் என்னை சேர்த்து வைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன்’ எனக்கூறி அழுது அடம்பிடித்து போராட்டம் நடத்தினான். இதனால் அவனை எச்சரித்து அவனது பெற்றோரை வரவழைத்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம், கல்வித்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 21 December 2025: தங்கம் மாதிரி ஏறும் முட்டை விலை! இனி ஆம்லேட் கனவுதான்.. விலை எவ்வளவு?
டெட் தேர்வில் திருப்பம்! சிறுபான்மை பள்ளிகளுக்கு இனி அந்த கவலை இல்லை.. முதல்வர் போட்ட அதிரடி கையெழுத்து!