காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி... பெற்ற தந்தையே வெட்டிக் கொன்ற கொடூரம்...!!!

By vinoth kumar  |  First Published Nov 16, 2018, 3:51 PM IST

கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்து கொண்ட காரணத்தால் நந்தீஷ் மற்றும் சுவாதி இருவரையும் தம்பதியினரின் பெண் வீட்டா் வெட்டி கொன்று காவிரியாற்றில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்து கொண்ட காரணத்தால் நந்தீஷ் மற்றும் சுவாதி இருவரையும் தம்பதியினரின் பெண் வீட்டா் வெட்டி கொன்று காவிரியாற்றில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த வெங்கடேஷ்புரம் பகுதியை சேர்ந்தவர் நந்தீஷ். அதே பகுதியை சேர்ந்த, உயர்ந்த ஜாதியை சேர்ந்த சுவாதி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த ஆகஸ்ட் மாதம் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தம்பதிகள் ஒசூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒன்றில் பணியாற்றி வந்தனர். 

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில் இருவரும் கடந்த சில நாட்களாகவே இருவரையும் காணவில்லை. ஆகையால் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர். பின்னர் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். பின்னர் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் இரண்டு சடலங்கள் இருப்பதாக தகவல் வெளியானது. அங்கு சென்று  விசாரித்ததில் அவர்கள் ஓசூரைச் சேர்ந்த நந்தீஷ்-ஸ்வாதி என்பது உறுதி செய்யப்பட்டது. காதலர்களை கொன்று விட்டு கை,கால்களை கட்டி காவிரியில் வீசியுள்ளனர். 

பின்னர் நடந்த விசாரணையில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த நந்தீஷை காதல் திருமணம் செய்த காரணத்தினால், ஸ்வாதி மற்றும் நந்தீஷ் இருவரையும் அவரது தந்தை மற்றும் உறவினர்கள் 5 பேர் கொலை செய்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து ஸ்வாதியின் தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இருவரையும் ஸ்வாதியின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் 5 பேர் அடித்துக் கொலை செய்திருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து ஸ்வாதியின் தந்தை உள்பட 3 பேரை போலீசாரால் கைது செய்துள்ளனர். ஸ்வாதியின் சித்தப்பா உள்ளிட்ட மேலும் 2 பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.  2 பேரின் உடலை மீட்ட போலீசார் பிரதேச பரிசோதனைக்காக மருத்தவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

இதேபோல உடுமலையில் சங்கரும்-கவுசல்யாவும் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து 2015-ம் ஆண்டு மாதம் 13-ம் தேதி உடுமலை பஸ் நிலையம் அருகே கூலிப்படை கும்பலால் கொடூரமாக சங்கர் படுகொலை செய்யப்பட்டார். மேலும் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி வாலிபர் கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணவக்கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து தமிழகத்தில் தற்போது இதுபோல மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!