ஓசூர் நகராட்சியை மாநகராட்சியாக மாற்றப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தின் 14-வது மாநகராட்சியாக ஓசூர் நகரம் மாற்றப்பட்டுள்ளது.
ஓசூர் நகராட்சியை மாநகராட்சியாக மாற்றப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தின் 14-வது மாநகராட்சியாக ஓசூர் நகரம் மாற்றப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகராட்சி தற்போது சிறப்ஙுப நிலை நகராட்சியாக உள்ளது.
ஓசூரில், நாட்டில் மிகப்பெரிய இரண்டு சிப்காட் தொழிற்பேட்டை, டால் விமான நிலையம், ஐ.டி. பார்க் ஆகியவை உள்ளன. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாம் உள்ளிட்ட பல மொழிகள் பேசுவோர் இங்கு வசிக்கின்றனர். 1962 ஆம் ஆண்டு ஊராட்சியாக இருந்த ஓசூர், பின் தேர்வுநிலை பேரூராட்சியாக மாற்றப்பட்டது. 1992-ல் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1998-ல் சிறப்பு தேர்வுநிலை நகராட்சியாகவும் மாற்றப்பட்டது.
தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றான இதை, மாநகராட்சியாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இந்த நிலையில், ஓசூர் நகராட்சி, மாநகராட்சியாக அறிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அண்மையில் நாகர்கோவில் நகராட்சி, தமிழகத்தின் 13-வது மாநகராட்சியாக மாற்றப்பட்ட நிலையில், 14-வது மாநகராட்சியாக ஓசூர் நகரம் மாற்றப்பட்டுள்ளது. மாவட்ட தலைநகரம் அல்லாத ஓசூர் நகராட்சி, முதல் மாநகராட்சியாகும் பெருமையை பெற்றுள்ளது.