தனியார் நிறுவன ஒன்று 102 அரசு பள்ளிகளை தத்தெடுத்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பகுதியில், அசோக் லேலண்ட் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
தனியார் நிறுவன ஒன்று 102 அரசு பள்ளிகளை தத்தெடுத்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பகுதியில், அசோக் லேலண்ட் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், 'ரோடு டூ ஸ்கூல்' என்ற திட்டத்தில், 2015 - 16, 2016 - 17-ல், கல்வியில் மிகவும் பின்தங்கிய, 72 அரசு துவக்க பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளை தத்துதெடுத்தது.
அத்துடன் கல்வித்தரத்தை மேம்படுத்த 80 ஆசிரியர் - ஆசிரியைகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாணவ, மாணவியரின் கல்வித்திறன் மேம்படுத்தப்பட்டது.
இந்நிலையில் விரிவுப்படுத்தும் வகையில் நடப்பாண்டில் சூளகிரி, தளி, கெலமங்கலம் ஒன்றியங்களில், 102 அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை, அசோக் லேலண்ட் நிறுவனம் தத்தெடுத்துள்ளது.
மாணவர்களின் எண்ணிக்கைக்கு பொறுத்து ஆசிரியர்களை நியமிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் அரசு அனுமதியை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரியிடம், அந்நிறுவன மனிதவள தகவல் தொடர்பு சுமூக பொறுப்புணர்வு திட்ட தலைவர் பாலசந்தர், வழங்கினார். 102 அரசு பள்ளிகளுக்கும் உட்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளை அந்த தனியார் நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது.