உயிருக்கு ஆபத்தான நிலையில் வீலிங் சாகசம்... இளைஞர்கள் அட்டூழியம்!

By vinoth kumarFirst Published Aug 30, 2018, 4:43 PM IST
Highlights

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் வீலிங் செய்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் வீலிங் செய்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தமிழகத்தில் பைக் ரேஸ் மற்றும் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்வது என பல்வேறு சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. பெரும்பாலும் இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்கின்றனர். ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள், கார்கள் உள்ளிட்டவை அதிவேகத்தில் செல்கின்றன. இந்நிலையில் ஆபத்தான நிலையில் இருசக்கர வாகனத்தில் வீலீங் செய்கின்றனர். 

இதுபோன்ற சம்பவங்களால் அவர்களுக்கும், அவர்களால் மற்றவர்களுக்கும் ஆபத்து ஏற்படும் நிலை தான் உண்டாகிறது. இதை நகர காவல் துறையினர் கண்டு கொள்வதே இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இனியாவது காவல்துறை விழித்துக்கொண்டு அச்சுறுத்தும் வகையிலும் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்யும் நபர்களை கண்டறிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இது போன்று வீலிங் செய்பவர்களுக்கு தண்டனை வழங்கி ஆபத்துக்கள் நிகழாத வண்ணம் காக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

click me!