ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி... ஓசூரில் அதிர்ச்சி சம்பவம்!

By vinoth kumar  |  First Published Oct 4, 2018, 2:53 PM IST

ஓசூர் அருகே காதல் ஜோடி மரத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஓசூர் அருகே காதல் ஜோடி மரத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்தவர் அனுமப்பா. இவரது மகன் ஏம்மண்ணா. இவர் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். 

Tap to resize

Latest Videos

இவரது வீட்டின் எதிரே சூரப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூரம்மா (21) என்ற மகள் உள்ளார். எதிரெதிர் வீடு என்பதால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. இவர்கள் இருவருமே ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் 2 பேரும் சகஜமாக பழகுவதாக அவர்கள் பெற்றோர்கள் கருதினார். 

இந்நிலையில் 2 குடும்பத்தினருக்கு தகராறு காரணமாக முன்விரோதம் ஏற்பட்டது. இதனால் இரண்டு குடும்பத்தினர் பேசாமல் இருந்து வந்தனர். ஆனால் காதல் ஜோடியான ஏம்மண்ணாவும், சூரம்மாவும் தங்களது காதலுக்கு இரு குடும்பத்தாரும் சம்மதம் தெரிவிக்க மாட்டார்களோ? என்று கருதினர். இதனால் அவர்கள் வருத்தத்தில் இருந்தனர். 

நேற்று இரவு 10 மணியளவில் இருவீட்டாரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். ஆனால் காதல் ஜோடியான ஏம்மண்ணாவும், சூரம்மாவும் வீட்டில் இருந்து வெளியேறினர். பிறகு புளியமரத்தில் காதல்ஜோடி இருவரும் ஒரே கயிற்றில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர். இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள் இதனை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே இந்த சம்பவம் குறித்து அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!