பேஸ்புக் மூலம் பழகி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி வெள்ளகோவில் பகுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேஸ்புக் மூலம் பழகி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி வெள்ளகோவில் பகுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு அடுத்த சூரம்பட்டிவலசு நேதாஜி வீதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் நந்தகுமார். இவர் திருப்பூர் மாவட்டம் மூலனூர் டீ கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கும்பகோணம் புளியம்பேட்டையைச் சேர்ந்த சாமிநாதன் மகள் சத்யபிரியா. நந்தகுமார்- சத்யபிரியா இருவரும் பேஸ்புக் மூலம் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். பின்னர் இது நாளடைவில் காதலாக மாறியது. பெற்றோருக்கு தெரியாமல் 6 மாதங்களுக்கு முன்னர் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இதனால் இருவரின் பெற்றோர்கள் வீட்டில் இவர்களை சேர்க்கவில்லை.
இதனைத்தொடர்ந்து இவர்களது பெற்றோர்களுக்கு தெரியாமல் வெள்ளகோவில், உப்புபாளையம் ரோட்டில் உள்ள வி.ஜ.பி நகரில் தனி வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். யாருடைய தயவு இல்லாமல் திருமணம் செய்து கொண்டதால், நத்தகுமார் மூலனூரில் உள்ள டீ கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் எப்போதும் காலையில் வேலைக்கு வரும் நந்தகுமார் வேலைக்கு வரவில்லை. ஆகையால் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் யாரும் திறக்காததால் ஜன்னல் கதவை திறந்து பார்த்தார்.
அப்போது நந்தகுமார் மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கி கொண்டு இருந்தது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தரையில் சத்யபிரியா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து இவர்களது உடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது அங்கு ஒரு கடிதம் கிடைத்தது. அதில் அன்புள்ள எங்கள் சொந்தங்கள், நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நாங்கள் இருவரும் இந்த உலகத்தை விட்டு பிரிகிறோம் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.